Asianet News TamilAsianet News Tamil

யாரு வம்பு தும்புக்கும் போகாமல் சிவனேன்னு கிடக்கும் ராமதாஸ்!! 7+1 கிடைத்த குஷியில் விதவிதமா ட்வீட்...

 7+1 கிடைத்ததில் உற்சாகமாக இருக்கும் ராமதாஸ், வாய்க்கொடுத்து வம்பில் சிக்காமல், தைலாபுரம் தோட்டத்தில் யார் யார் என்ன விமர்சிக்கிறார்கள் என சமூகவலைத்தளங்களில் நோட்டமிட்டு வருகிறார். நாங்க அப்படித்தான் நீ என்னவேனா கலாய்த்துக்கோங்க, நான் பதிலடி கொடுப்பதாக இல்லை என  யார் வம்பு தும்புக்கும் போகாமல் சிவனேன்னு இருக்கிறார் பெரிய டாக்டர் ராமதாஸ்.

Ramadoss Tweet about current politics
Author
Chennai, First Published Feb 26, 2019, 6:54 PM IST

 7+1 கிடைத்ததில் உற்சாகமாக இருக்கும் ராமதாஸ், வாய்க்கொடுத்து வம்பில் சிக்காமல், தைலாபுரம் தோட்டத்தில் யார் யார் என்ன விமர்சிக்கிறார்கள் என சமூகவலைத்தளங்களில் நோட்டமிட்டு வருகிறார். நாங்க அப்படித்தான் நீ என்னவேனா கலாய்த்துக்கோங்க, நான் பதிலடி கொடுப்பதாக இல்லை என  யார் வம்பு தும்புக்கும் போகாமல் சிவனேன்னு இருக்கிறார் பெரிய டாக்டர் ராமதாஸ்.

முதல்முறையாக ஏதோ சாதித்த சந்தோஷத்தில் இருக்கும் அவர், அந்த உற்சாகத்தை  தன்னுடைய தொண்டர்களுக்கும்  ஒவ்வொரு நாளும் பொன்மொழிகள் மூலம்  டிப்ஸ் கொடுத்து வருகிறார். இந்த வகையில் இன்றைக்கு தந்திருக்கும் அட்வைஸ், "சவால்களை ஏற்றுக் கொள். அப்போது தான் உனது வாழ்வில் வெற்றியால் கிடைக்கும் பரவசத்தை உணர முடியும்.- ஜார்ஜ் பேட்டன்" என்று பதிவிட்டுள்ளார். அதிமுக-பிஜேபியுடன் கூட்டணி வைத்ததால் அதிருப்திகளும்,  கலாய்ப்புகளும் தொடர்ந்து பல தரப்பிலிருந்து எழுந்து வருவதால் அதனை சவாலாக எடுத்து தொண்டர்களை சமாளிக்க டிப்ஸ் கொடுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்ததிலிருந்து அவர் போட்ட ட்வீட் என்னன்னு பார்க்கலாம் வாங்க... 

கூட்டணி சேருவதற்கு முந்தையநாள், ஓர் உண்மையான தலைவர் என்பவர் கருத்தொற்றுமையை தேடிக்கொண்டிருக்க மாட்டார். மாறாக கருத்தொற்றுமையை வார்த்தெடுப்பவராக இருப்பார்!
- மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர். என பதிவிட்டுள்ளார்.

கூட்டணி அமைத்து நாளன்று, தொண்டர்களுக்காக ஒன்று சேர்வது தான் தொடக்கம்; ஒன்றாகவே இருப்பது முன்னேற்றம்; ஒன்றாக உழைப்பது தான்  வெற்றி! - எட்வர்ட் எவரெட் ஹால் என பதிவிட்டுள்ளார்.

7+1  வாங்கிய பாமக மீதும் கொடுத்த அதிமுக மீது கடுப்பான தேமுதிகவிற்காக போட்ட டிவீட்; திறமையும், தன்னம்பிக்கையும் உள்ளவர்களுக்கு எதன் மீதும் பொறாமை ஏற்படாது. பொதுவாகவே பொறாமை என்பது நாடி நரம்பெல்லாம் பாதுகாப்பின்மை ஊறிப்போனதன் அறிகுறி தான்! - ராபர்ட் ஏ.ஹெய்ன்லெய்ன்

பாமகவுக்கு கொடுத்ததை போலவே தேமுதிகவிற்கே, பொறாமை என்பது ஏவப்படுபவர்களுக்கு சில தொந்தரவுகளை உண்டாக்கும்; அதே நேரத்தில் பொறாமைப்படுபவர்களை அது வதம் செய்து விடும்!
- வில்லியம் பென் 

அடுத்ததாக, பொறாமை என்பது ஒரு மனப் புற்றுநோய்!
- பி.சி. போர்ப்ஸ் பதிவிட்டார்.

பாமகவுக்கு கொடுத்ததைப்போலவே எங்களுக்கும் வேண்டும் என அடம்பிடித்த தேமுதிகவிற்காகவும், தொடர்ந்து பாமகவை கலாய்க்கும் எதிரணியில் இருப்பவர்களுக்கும்  பொறாமை என்பது ஒன்றுக்கும் உதவாதவர்களால் அறிவாற்றல் கொண்ட மேதைக்கு செலுத்தப்படும் மரியாதை ஆகும்!- ஃபுல்டன் ஜே. ஷீன்

இப்படி நாளுக்கு நாள் போன் மொழி போட்டு தொண்டர்களை உற்சாகப்படுத்தியும், எதிரணியை வெறுப்பேற்றியும் ட்வீட் போட்டு வருகிறார் ராமதாஸ்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios