Asianet News TamilAsianet News Tamil

உயர்நீதிமன்றத்தில் அலுவல் மொழியாக தமிழ்..! சட்டப்பேரவையில் தீர்மானம்.? ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்த ராமதாஸ்

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் வெளியிடும் திட்டம் வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த திட்டம் தடையின்றி தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Ramadoss has insisted that Tamil should be brought as the official language in the High Court
Author
First Published Jan 23, 2023, 12:39 PM IST

தமிழ் மொழியில் தீர்ப்பு

உச்சநீதிமன்ற தீர்ப்புக்களை இந்திய மொழிகளில் வெளியிடுவது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்து தெரிவித்து இருந்தார். இதற்க்கு பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில் இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியிருக்கிறார். தீர்ப்புகளை பாமரர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது!

தேடி வந்து ஆதரவு கொடுத்த காலம் போய்! ஆதரவுக்காக இப்படி தேடி ஓடுகிறார்களே? வேதனையில் பூங்குன்றன்..!

Ramadoss has insisted that Tamil should be brought as the official language in the High Court

20 ஆண்டுகால போராட்டம்

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை வழக்கு தொடுக்கும் பாமர மக்கள் அறிந்து கொள்ள வசதியாக மாநில மொழிகளில் வெளியிட வேண்டும்; சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழ் அறிவிக்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகிறது! உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை தமிழ் உள்ளிட்ட 9 மொழிகளில் வெளியிடும் திட்டம்  ஏற்கனவே 17.07.2019-ஆம் நாள் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அடுத்த சில வாரங்களில் இத்திட்டம் முடக்கப்பட்டு விட்டது. இப்போது தொடங்கப்படும் திட்டம் அதுபோல் இல்லாமல் தடையின்றி நீடிப்பதை உறுதி செய்ய வேண்டும்!

Ramadoss has insisted that Tamil should be brought as the official language in the High Court

உயர்நீதிமன்றத்தில் தமிழ்

சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றம் நிறைவேற்ற வேண்டும். இதை வலியுறுத்தி விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில் மீண்டும் ஒரு தீர்மானத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

ஈரோடு இடைத்தேர்தல்..! விருப்ப மனு தாக்கல் செய்ய தேதி குறித்த இபிஎஸ்.! அதிர்ச்சியில் அண்ணாமலை
 

Follow Us:
Download App:
  • android
  • ios