மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில், பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துடன் இணைந்து திமுக பணியாற்றும் என அறிவித்தார். ஸ்டாலினின் இந்த அறிவிப்பு விவாதப் பொருளாகி உள்ளது. 

இதுகுறித்து ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’எந்தத் தேர்தலாக இருந்தாலும் பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றியை தலைமையின் வழி காட்டுதலும், தொண்டர்களின் உண்மையான உழைப்பும், பாட்டாளிகளின் ஆதரவும் உறுதி செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. மக்களிடம் செல்வோம்! அவர்களுக்காக உழைப்போம்!! அவர்களால் வெல்வோம்!

வெற்றிடங்களைத் தான் காற்று நிரப்பும். பாட்டாளி மக்கள் கட்சி அறிவார்ந்த இளைஞர்களும்,  உண்மையான தொண்டர்களும் நிறைந்த கட்சி. பாட்டாளி மக்கள் கட்சியுடன் இரண்டறக் கலந்த இளைஞர்கள் இயக்கத்தில் நிறைந்துள்ள நிலையில், அந்நிய அறிவுக்கு தேவையும் இல்லை; தேடலும் இல்லை’’ எனப்பதிவிட்டுள்ளார். 

 

இந்தப்பதிவிற்கு எதிராக சிலர் கருத்துக் கூறி வருகின்றனர். ’’சுய அறிவு இருந்தால் சிஏஏவிற்கு எதிராக ஓட்டு போட்டு இருப்பீர்கள். எந்த அந்நிய அறிவு சொல்லி கொடுத்து கூட்டணி தர்மத்திற்காக ஓட்டு போட்டீர்கள்’’எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.