Asianet News TamilAsianet News Tamil

ராமதாஸ் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்... அடம்பிடிக்கும் திமுக..!

பாமகவினரின் அராஜகங்களால் மறுவாக்குப்பதிவு நடைபெற்ற பகுதிகளை சேர்ந்த வாக்காளர்களிடம் டாக்டர் இராமதாஸும், அவரது கட்சியினரும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தி உள்ளார்.
 

Ramadoss apologizes to me ... the DMK compassion ..!
Author
Tamil Nadu, First Published May 21, 2019, 3:40 PM IST

பாமகவினரின் அராஜகங்களால் மறுவாக்குப்பதிவு நடைபெற்ற பகுதிகளை சேர்ந்த வாக்காளர்களிடம் டாக்டர் இராமதாஸும், அவரது கட்சியினரும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தி உள்ளார்.Ramadoss apologizes to me ... the DMK compassion ..!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேர்தல்ல என்ன நடக்கும்? பூத்ல என்ன நடக்கும்? நம்மதான் இருப்போம் பூத்துல… சொல்றது புரியுதா இல்லையா?" என்று நாடாளுமன்றத் தேர்தல் துவங்கிய உடனே திருப்போரூர் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசியது யார்? தங்களின் மகன் அன்புமணி ராமதாஸ்தானே? இதன் உள்நோக்கம் என்ன? தருமபுரி தொகுதியில் இதை அன்புமணியினுடைய ஆட்கள் தேர்தல் அன்று கச்சிதமாக செய்து முடித்தனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில், வாக்காளர்களை வாக்களிக்க முடியாத அளவிற்கு எல்லாவிதமான அராஜகங்களையும் கட்டவிழ்த்துவிட்டு, அவர்களின் வாக்குகளை, அன்புமணி ராமதாஸ் ஆட்களே வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைந்து, வாக்குகளை பதிவு செய்தனர் என்பது ஊரறிந்த உண்மை.

Ramadoss apologizes to me ... the DMK compassion ..!

இதை அன்புமணி ராமதாசால் திட்டவட்டமாக மறுக்க முடியாத காரணத்தால்தான் மறுவாக்குப் பதிவு நடைபெற்றது என்பதை டாக்டர் ராமதாஸ் ஏனோ புரிந்து கொள்ள மறுக்கிறார், மறைக்கின்றார்.

மறுவாக்குப் பதிவு நடைபெற்ற வாக்குச் சாவடிகளில், வாக்களித்து விட்டு வந்த வாக்காளர்கள் பல ஊடகங்களில் பேட்டி அளித்ததை டாக்டர் ராமதாஸ் கண்களுக்கு தெரியவில்லையா? வாக்களித்த பின்னர் அவர்கள் அளித்த பேட்டியில் "இருபது, முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, இன்றுதான் நாங்கள், எங்களுக்குரிய வாக்கினை, நாங்களே பதிவு செய்தோம்."என்று கூறினர். இதிலிருந்து என்ன புரிகிறது. இதுவரை ராமதாஸ் கூட்டத்தினரே அவர்களின் வாக்குகளை, திருட்டுத்தனமாக பதிவு செய்து வந்தது வெட்டவெளிச்சமாகி உள்ளது. எனவே, தி.மு.க.தான் அவர்களின் ஜனநாயகக் கடமை ஆற்றுவதற்கு உரிமை பெற்று தந்ததை, அவர்கள் மகிழ்ச்சியுடன் கூறியதை ஊடகங்கள் வெளிப்படுத்தின. இதை பார்த்து, பொறுத்துக் கொள்ள முடியாமல், டாக்டர் இராமதாஸ் அவர்கள் தி.மு.க.மீது வீண் பழி போடுகிறார்.Ramadoss apologizes to me ... the DMK compassion ..!

குறிப்பிட்ட பகுதி வாக்காளர்களுக்கு, வாக்களிக்கின்ற உரிமையை பெற்றுத் தந்த தி.மு.க.வை எரிச்சலுடன் அறிக்கை விடும் டாக்டர் இராமதாஸ் அவர்கள், தேனி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட இரண்டு வாக்குச் சாவடிகளில் போட்டியிட்ட எந்த வேட்பாளரும் மறுவாக்குப் பதிவு கேட்காத பட்சத்தில், இரண்டு வாக்குச் சாவடிகளுக்கு மட்டும் மறு வாக்குப்பதிவு செய்திட ஐம்பது மின்னணு இயந்திரங்களை கோவையிலிருந்து தேனிக்கு கொண்டு வந்ததைப் பற்றி டாக்டர் இராமதாஸ் கேள்வி கேட்க மறுப்பது ஏன்? "மாமியார் உடைத்தால் மண் பானை, மருமகள் உடைத்தால் பொன் பானை" என்ற பழமொழிதான் டாக்டர் இராமதாஸ் அவர்களின் அறிக்கை ஞாபகப்படுத்துகிறது.

மறுவாக்குப் பதிவு நடைபெற்ற பகுதிகளில் உள்ள வாக்காளர்களிடம் டாக்டர் இராமதாஸ் அவர்களும், அவரது கட்சிக்காரர்களும்தான் மன்னிப்பு கேட்க வேண்டுமே தவிர, திராவிட முன்னேற்றக் கழகம் அல்ல’’ என அவர் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios