ஜனாதிபதி தேர்தலை பாமக புறக்கணிக்கும் எனவும், அணையப் போகும் விளக்கு பிரகாசமாக எரிவது போன்று தற்போது அதிமுக செயல்பட்டு கொண்டிருப்பதாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

குடியரசு தலைவருக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதில் பாஜக வேட்பாளராக பீகார் முதலமைச்சராக இருந்த ராம்நாத் கோவிந்தும் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் மீராக்குமாரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதைதொடர்ந்து பாஜக வேட்பாளருக்கு  அதிமுகவின் 3 அணிகளும் காங்கிரஸ் வேட்பாளருக்கு திமுகவும் ஆதரவு தருவதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாமக குடியரசுத்தலைவர் தேர்தலை புறக்கணிக்கும் எனவும், துணை குடியரசு தலைவர் தேர்தல் குறித்து ஆலோசத்து முடிவெடுக்கப்படும் எனவும் அக்கட்சியின் நிறுவனர் தெரிவித்துள்ளார்.

மேலும் அ.தி.மு.க. முடிந்து போன கட்சி எனவும், அணையப் போகும் நேரத்தில் விளக்கு பிரகாசிப்பதை போல் இப்போதைய நிலை உள்ளது எனவும் தெரிவித்தார்.

வரும் பாராளுமன்ற தேர்தலில் 15 எம்.பி. தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்கின்ற வகையில் வெற்றி பெற்றே தீருவோம் எனவும், பாமகவைபோல் எந்த கட்சியும் மக்களுக்கும், மொழிக்கும் பாடுபட்டதில்லைஎனவும் குறிப்பிட்டார்.