போலீசார் அனுமதி அளித்த மாற்றுப்பாதையில் செல்லாமல் திட்டமிட்டபடிதான் செல்வோம் என ராம ராஜ்ஜிய ரத யாத்திரை நிர்வாகிகள் பிடிவாதம் பிடித்தால் போலீசார் அதனை தடுத்து நிறுத்தனர். பின்னர் கடுமையான வாக்குவாதத்துக்குப் பிறகு போலீசார் அனுமதித்த வழியில் ரதம் புறப்பட்டுச் சென்றது.

விஸ்வ ஹிந்து பரிஷத்’ அமைப்பின் சார்பில், உத்தரப்பிரதேச மாநிலத்தில்  துவங்கிய ராம ராஜ்ஜிய ரத யாத்திரை மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் உட்பட 5 மாநிலங்களைக் கடந்து, கேரளாவில் இருந்து புனலூர் வழியாக  நேற்றுமுன்தினம் தமிழகம்  வந்தடைந்தது. தொடர்ந்து மதுரை வழியாக ராமநாதபுரம் மாவட்டத்தை சென்றடைந்தது.

உத்தரபிரதேசத்தில் தொடங்கிய இந்த ரத யாத்திரை ராமேஸ்வரத்தில் முடிவடைந்தது. இதையடுத்து இன்று ரத யாத்திரை மீண்டும் உத்திர பிரதேசம் செல்கிறது.  இந்த யாத்திரை ஏர்வாடி, கீழக்கரை வழியாக செல்ல ரத நிர்வாகிகள் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் அந்த வழியாக செல்ல அனுமதி மறுத்த போலீஸ் சாயல்குடி, வேம்பார் வழியாக செல்ல அனுமதி அளித்தனர். ஆனால் ரத நிர்வாகிகள் நாங்கள் திட்டமிட்டபடிதான் செல்வோம் என்று பிடிவாதம் பிடித்தனர். இதனால் போலீசார் ரதத்ததை தடுத்து நிறுத்தினர்.

இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட வாக்குவாதத்திக்குப் பிறகு போலீசார் அனுமதித்த பாதையில் செல்ல ரத நிர்வாகிகள் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து ரதம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.