எனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது என்று ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்ச்சி குறித்து பாஜக மூத்த தலைவர்  எல்.கே.அத்வானி மிகழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

.ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக அயோத்தியில் நாளை 5.8.2020அன்று  மதியம் பூமிபூஜை நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், அங்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிய தொடங்கி இருக்கிறார்கள். அயோத்தி மாநகரமே அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. உத்திரபிரதேசம் மாநில முதல்வர் யோகியானந்த் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநிலம் முழுவதும் பலப்படுத்த உத்தரவிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டு பூமி பூஜைக்கான வெள்ளியிலான செங்கற்களை எடுத்து கொடுக்கிறார்.

 பாஜக மூத்த தலைவர்  எல்.கே.அத்வானி இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "எனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது. எனக்கு மட்டுமின்றி, நாட்டு மக்களுக்கும் இது வரலாற்று சிறப்புமிக்க நெகிழ்ச்சியான நாள். ராமர்கோவில் அமைவதற்கு தியாகங்கள் மேற்கொண்ட அனைவரையும் நன்றியுடன் நினைவுகூறுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.