பத்திரிகையாளர்களை ராமமோகன் ராவ் சந்தித்தபோது, பத்திரிகையாளர்களும், தெலைக்காட்சியில் அதை பார்த்த மக்களும் ஆச்சரிமடைந்து போனார்கள்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காரணம் குற்றச்சாட்டுக்கு ஆளான ராமமோகன் ரவோ, ரொம்பவே கூலாக, தெள்ளத் தெளிவாக, ஆக்ரோஷமாக வார்த்தைகளை வெளிப்படுத்தியதுதான்.

ஏராளமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர், எந்தவித பயமோ, பதற்றத்தையோ வெளிகாட்டிக் கொள்ளவில்லை. இந்த நிலையில், அவரது பேட்டி குறித்து கருத்து தெரிவித்த பி.ஜே.பி.யின் மாநில பொது செயலாளர்களில் ஒருவரான எச்.ராஜா, ராமமோகன ராவ் மூன்றாம் தர மனிதர்போல் பேட்டி அளித்ததாக, ஆவேசமாக தெரிவித்தார்.

போதிய ஆதாரங்களுடன், மத்திய அரசு நடவடிக்கை எடுத்த பின்னரும், சப்பை கட்டி பேசினால், என்ன அர்த்தம் என கேள்வி எழுப்பினார். குற்றஞ்சாட்டப்பட்டவர்களை கொஞ்சுவார்களா? என்றும் நடவடிக்கை தான் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

படித்த, பட்டம் பெற்ற ஒரு அதிகாரி போல் பேசாமல், பேட்டியின் எடுத்த எடுப்பிலேயே ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி போன்ற தலைவர்களை துணைக்கு இழுத்தும், தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் சவால் விடுத்தும், 3ம் தர மனிதர்போல் நடத்து கொண்டார் என காட்டமாக தெரிவித்தார்.