தமிழக அரசியலின் அடுத்த கட்ட பரபரப்பு ராஜ்ய சபா சீட். அதிமுக, திமுக கட்சிகளில் யாருக்கு தரப்போகிறார்கள் என்பதில் மல்லுக்கட்டு ஆரம்பித்து இருக்கிறது. இரு கட்சிகளுமே இன்னும் யாருக்கு சீட் என்பதை அதிகாரப் பூர்வமாக அறிவிக்காத நிலையில் இரு கட்சி நிர்வாகிகளுமே வலுவாக முட்டி மோதி வருகிறாகள். இந்நிலையில் அந்த பரபரப்பு திமுகவில் தொற்றிக் கொண்டுள்ளது. 3 ராஜ்யசபா சீட்டுகளில் ஏற்கெனவே ஒரு சீட்டுக்கு துண்டைப்போட்டு வைத்து விட்டார் வைகோ. இந்த நிலையில் மீதமுள்ள இரண்டு சீட் போட்டாபோட்டி நடந்து வருகிறது. இந்த லிஸ்டில் சுப்புலட்சுமி ஜெகதீசன், ரவீந்திரன், ராதாகிருஷ்ணன், முத்துசாமி உள்ளிட்ட சீனியர்கள் சிலரும் இடம்பிடித்துள்ளனர். இந்நிலையில் சு.ப.வீரபாண்டியனுக்கு ராஜ்யசபா மூலம் நாடாளுமன்றத்திற்கு அனுப்ப விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வருகின்றனர். சுபவீக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு போன்ற பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

இதனை அறிந்த சுபவீ, திமுகவில் பல்லாயிரக்கணக்கானோர் பல ஆண்டுகளாக உழைத்து வருகின்றனர். அவர்கள் இருக்கும்போது ராஜ்யசபா சீட்டை எனக்கு வழங்குவது சிறப்பாக இருக்காது. அதனை நான் விரும்பவும் இல்லை’’ என சு.ப.வீரபாண்டியன் அறிக்கை விடுத்துள்ளார்.