மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த தம்பிதுரை ராஜ்யசபா எம்.பி.யாக முயற்சியில் இருக்கிறார்.

மாநிலங்களவை உறுப்பினர் பதவி தமிழகத்தில் இருந்து ஆறு காலியாக உள்ளது. இதற்கான தேர்தல் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம். சட்டமன்றத்தில் தற்போது அதிமுகவிற்கு உள்ள எம்எல்ஏக்களின் பலம் அடிப்படையில் மூன்று எம்பிக்களை அக்கட்சியால் தேர்வு செய்ய முடியும்.

  

நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் செய்து கொண்ட ஒப்பந்தப்படி ஒரு எம்பி பதவியை பாமகவிற்கு அதிமுக விட்டுக்கொடுக்க உள்ளது. கூட்டணி உடன்படிக்கையின்படி ராஜ்யசபா எம்பி பதவி ஒன்று பாமகவிற்கு நிச்சயம் கொடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கடந்த வாரம் பேட்டி அளித்திருந்தார். இதனால் 2 எம்பி களை அதிமுக தனது கட்சியில் இருந்து தேர்வு செய்து கொள்ள முடியும். 

அந்த இரண்டு எம்பிக்களில் ஒரு எம்பி பதவியை பெறுவதற்கு தான் தம்பிதுரை காய் நகர்த்தி வருகிறார். கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை கரூர் எம்பி ஆக இருந்தவர் தம்பிதுரை. ஆனால் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் அவர் தோல்வியை தழுவினார். நாடாளுமன்ற துணை சபாநாயகராகவும் அவர் இருந்துள்ளார். 

எடப்பாடி பழனிசாமிக்காக தொடர்புகளை தம்பிதுரை தான் முதலில் கவனித்து வந்தார். ஆனால் அவர் பாஜகவுடன் நெருங்கிய காரணத்தினால் எடப்பாடி அவரை கொதிக்க வைத்து இருந்தார். இந்த நிலையில் டெல்லி தமிழகம் இடையிலான அரசியல் தொடர்பு சற்று தொய்வடைய ஆரம்பித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு டெல்லியில் மத்திய அமைச்சரவையில் பலரும் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன.

 

அதிகாரிகளை வெவ்வேறு துறைகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் தனது தொடர்புகளை புதுப்பிக்க அனுபவம் வாய்ந்த ஒரு நபர் வேண்டும் என்று கருதுகிறார். எனவே இதனை பயன்படுத்தி ராஜ்யசபா எம்பி பதவியை கைப்பற்ற விட தம்பிதுரை முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்காக இரண்டு முறை எடப்பாடி பழனிசாமி செய்யும் தம்பிதுரை சந்தித்துள்ளதாக கூறுகிறார்கள்.