மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு எம்.பி. இடம் தருவதாக கூறி தான் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது திமுக.

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் ஜூன் மாதம் மாநிலங்களவையில் காலியாக உள்ள சுமார் 60 இடங்களுக்கு தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கும் ஜூன் மாதமே தேர்தல் நடைபெறும் என்று கூறப்படுகிறது. 

தற்போதுள்ள பலத்தின் அடிப்படையில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தலா மூன்று மாநிலங்கள் அவை எம்.பி.க்களை பெற முடியும். அந்த வகையில் மதிமுகவிற்கு மாநிலங்களவையில் ஒரு இடம் தருவதாக ஸ்டாலின் வாக்குறுதி அளித்து நாடாளுமன்றத் தேர்தலில் அந்த கட்சியை தனது கூட்டணியில் இணைந்துள்ளார். தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஸ்டாலினை சந்தித்தபோது வைகோ இது குறித்து பேசியுள்ளார். அதனைக் கேட்டுக் கொண்ட ஸ்டாலின் தனது கட்சி நிர்வாகிகள் மூலமாக வைகோவிற்கு ஒரு தகவலை அனுப்பி உள்ளார். 

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கூறியபடி திமுக நிச்சயமாக மதிமுகவிற்கு வழங்கும் என்று ஸ்டாலின் தனது வாக்குறுதியை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் மதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகவும் நபர் திமுகவின் எம்.பி. ஆகவே மாநிலங்களவையில் செயல்பட வேண்டும் என்றும் இதனால் அந்த நபர் திமுகவில் இணைய வேண்டும் என்றும் ஸ்டாலின் தரப்பில் இருந்து வைகோவிற்கு கண்டிசன் போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது மதிமுக யாரை வேட்பாளராக கூறுகிறதோ அவரை எம்பியாக தயார் ஆனால் அந்த நபர் திமுக எம்.பி. ஆக இருக்க வேண்டும் என்பதுதான் ஸ்டாலினின் கண்டிசன் என்கிறார்கள். 

ஏற்கனவே ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுகவின் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றுள்ளார். எனவே அவர் நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்.பி. ஆகவே அடையாளம் காணப்படுவார். மேலும் திமுக கொறடா உத்தரவை மீறி அவரால் எதுவும் செய்ய முடியாது. இதே பாணியில்தான் மாநிலங்களவை எம்.பி. பதவியை மதிமுகவிற்கு கொடுத்தாலும் அந்த நபரை திமுக எம்.பி. ஆக மாற்ற ஸ்டாலின் தரப்பு வியூகம் வகுத்து உள்ளதாகக் கூறுகிறார்கள்.