எம்.பி. தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் ரஜினி தனது ரசிகர்களுக்கு நாளை காலை சிக்னல் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் 38 தொகுதிகளில் நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்க உள்ளது. வாக்குப்பதிவு துவங்கியவுடன் முதல் ஆளாக சென்னை செல்ல மேரிஸ் கல்லூரியில் உள்ள தனது வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க ரஜினி தயாராகியுள்ளார். 

காலை 7 மணிக்கு ரஜினி வாக்களிக்க வந்துவிடுவார் என்று அவரது பிஆர்ஓ இன்று காலையிலேயே அனைத்து ஊடகங்களுக்கும் தகவல் அனுப்பி விட்டார். வாக்களித்துவிட்டு வாக்குச்சாவடிக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த ரஜினி ஏற்பாடு செய்துள்ளதாக கூறுகிறார்கள். அதனால்தான் ரஜினி வாக்களிக்கும் நேரத்தை முதலிலேயே அவரது பிஆர்ஓ வெளியிட்டு விட்டதாகவும் சொல்லிக் கொள்கிறார்கள். 

ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு எனும் அம்சத்தை தான் வரவேற்பதாக ரஜினி கூறியிருந்தார். அந்த அடிப்படையில் நாளை காலை வாக்களித்து விட்டு வந்து நதி நீர் பிரச்சினையை தீர்ப்பதாக கூடிய கட்சிக்குத்தான் வாக்களித்துள்ளதாக ரஜினி சூசகமாக தகவல் தெரிவிப்பார் என்று கூறுகிறார்கள். இதன் அடிப்படையில் தனது ரசிகர்களும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்கிற சிக்னலை ரஜினி நாளை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.