இந்தியாவில் 17 மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி மக்களவைத் தேர்தலுக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் பிரச்சாரம் செய்தார்

அப்போது பேசிய அவர் . காங்கிரஸ் கட்சி என் மீது களங்கம் விளைவிக்க பார்க்கிறது. பாஜக ஆட்சி மீது எந்த விதமான குறைகளையும் சொல்ல முடியாது என்பதால் பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். 

ரபேல் வழக்கிலும் அப்படித்தான் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவிக்கிறார்கள். ராகுல் காந்தி என் மீது ரபேலில் களங்கம் விளைவிக்க பார்க்கிறார். என்னை களங்க படுத்தி, என்னை சிறியவன் போல காட்டி ஆட்சியை பிடிக்க பார்க்கிறார். ஆனால் அவர்கள் ஆட்சி அமைத்தால் வலுவற்ற ஒரு ஆட்சிதான் உருவாகும்.

என் மீது ராகுல் காந்தி சொல்லும் புகார்களை நிரூபிக்க முடியாது. இந்த புகார்கள், அவருக்குத்தான் பெரிய சிக்கலை ஏற்படுத்தும். நான் அவரை போல பணக்கார குடும்பத்தில் பிறக்கவில்லை. நான் மக்களோடு, மக்களாக ஏழையாக பிறந்தேன்.

உங்கள் அப்பா ராஜீவ் காந்தியை பெரிய நல்லவர் போல காங்கிரஸ் சித்தரித்தது. மிஸ்டர் கிளீன் என்று கூட சொன்னார்கள். ஆனால் அவர்தான் நம்பர் ஒன் ஊழல்வாதி. உங்கள் அப்பாவின் வாழ்க்கை ஒரு ஊழல்வாதியாகத்தான் முடிந்தது, என்று பிரதமர் மோடி கடுமையாக குற்றம்சாட்டினார்.