முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்கு கொடுக்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்ப பெற வேண்டும் என டெல்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த 1984ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, சீக்கிய பாதுகாவலரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இதைதொடர்ந்து, அதே ஆண்டில் சீக்கிய கலவரம் நடந்தது. அதில், ஏராளமான சீக்கியர்கள் கொலை செய்யப்பட்டனர்.

இந்த இன படுகொலையில், இந்திரா காந்தியின் மகனும், முன்னாள் பாரத பிரதமருமான ராஜிவ் காந்திக்கு முக்கிய பங்குள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இதைதொடர்ந்து கடந்த 1991ம் ஆண்டு, சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். அதே ஆண்டு அவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் டெல்லி சட்டமன்ற கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்த சபைமன்ற கூட்டத்தொடரின் போது ஜெர்னல்சிங் என்ற ஆம் ஆத்மி எம்.ல்ஏ, தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார்.
அதில் , 1984ம்ஆண்டு நடந்த சீக்கிய கலவர வழக்கில், சீக்கியர்கள் பலர் கொல்லப்பட்டனர். இது போன்ற இனபடுகொலைகள் வன்முறைகளில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்கு தொடர்பு இருந்ததால் அவருக்கு அளிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப் பெறவேண்டும் என கூறியிருந்தார். இதுகுறித்த தீர்மானம் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.