Rajini new party begins on December 12?

நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்த நாளான, டிசம்பர் 12 ஆம் தேதி புது கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த மே மாதம் 15 ஆம் தேதி முதல் தொடர்ந்து 5 நாட்கள் நடிகர் ரஜினிகாந்த், சென்னையில், தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார். 12 வருடங்களுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த், ரசிகர்களை சந்தித்ததால் தமிழக அரசியலில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் பேசும்போது, போர் வரும்போது அதை எதிர்கொள்வோம் என்று பேசினார்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் 12 ஆம்தேதி அதாவது அவரது பிறந்த நாள் அன்று அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

தற்போது நடிகர் ரஜினிகாந்த் தமிழக அரசியலை முழுமையாக ஆராய்ந்து வருகிறார் என்றும், அதனால் இந்த முறை அவர் நிச்சயமாக மிக விரைவில் அரசியலுக்கு பிரவேசிப்பார் என்றும் தகவல் வெளியாகி வருகின்றன. அது மட்டுமல்லாது ரசிகர் மன்றத்தின் மூத்த நிர்வாகிகள் டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினிகாந்த், முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்ற நம்பிக்கை கூறி வருகின்றனர்.

டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி தனது பிறந்த நாள் அன்று புது கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என்றும், இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. மேலும், ரஜினிகாந்த் புது கட்சி ஆரம்பிக்கும்பட்சத்தில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு போட்டியாக இருக்கும் என்று ரசிகர் மன்ற வட்டாரங்கள் கூறுகின்றன.