Rajinis face Smiling face to Kamal Navarro Stalin of Gopalapuram
கோபாலபுரம் எத்தனையோ அரசியல் ஆச்சரியங்களையும், அதிர்ச்சிகளையும், எழுச்சிகளையும் கண்டிருக்கிறது. ஆனால் கடந்த சில நாட்களாக அங்கே நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் சற்றே வித்தியாசமானவைதான்.
அதிலும் இந்த நிகழ்வுகளுக்கு ஸ்டாலின் காட்டும் நவரச ரியாக்ஷன்கள்தான் கழகத்தின் ஹாட் டாபிக்!
எனது அரசியல் பிரவேசம் உறுதி! என அறிவித்த ரஜினிகாந்த், முக்கிய அரசியல் பிதாமகர்களை சந்தித்து ஆசி பெற்றார். அந்த வகையில் கருணாநிதியையும் கோபாலபுரத்தில் சென்று சந்தித்தார். ’ஆன்மிக அரசியல் செய்யப்போகிறேன்’ என்று திராவிட சித்தாந்தங்களுக்கு எதிராக அறைகூவல் விடுத்தபடி தங்கள் இல்லம் நோக்கி வந்த ரஜினியை எதிர்கொண்ட ஸ்டாலினின் முகத்தில் புன்னகை இல்லை.

கருணாநிதியிடம் ரஜினியை அழைத்துச் சென்று பேச வைத்தபோது கூட, ரஜினியாகத்தான் கருணாநிதியின் அருகில் அமர்ந்து பேசுவதும், தன் அரசியல் பிரவேசம் பற்றி சொல்லி ஆசி வாங்குவதுமாக இருந்தார். அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கூட, ஸ்டாலின் என்னவோ ரஜினியை வெறித்து நோக்குவது போன்ற தோற்றத்தில்தான் இருப்பார். இந்த போட்டோவுக்கு ‘தளபதி, ரஜினியை முறைக்கிறார்’ என்றுதான் கமெண்ட் எழுதினர் கழக உடன்பிறப்புகள்.
கருணாநிதியை சந்தித்துவிடு கிளம்பிய ரஜினியின் காரானது, கோபாலபுரம் வீதியை விட்டு மறைவதற்குள் ‘தலைவரிடம் ரஜினி என்ன பேசினார் என்ரு எனக்கு தெரியாது. திராவிட கொள்கைகலை வீழ்த்துவேன் என்று சொல்லி வந்தவர்களெல்லாம் தோல்வியைத்தான் தழுவியுள்ளனர்.’ என்று ரஜினியை ஸ்டாலின் குத்த, பதிலுக்கு ரஜினியோ தன் வீட்டு வாசலில் வைத்து ‘நான் ஸ்டாலினை சந்தித்து பேசவில்லை.’ என்று ஒரே போடாக போட்டார்.
இந்த நிகழ்வுகளை அப்படியே லைவ்வாக விளக்கியிருந்த ஏஸியாநெட் தமிழ் இணையதளம், ‘ரஜினி என் அரசியல் எதிரி’ என்று ஸ்டாலின் வெளிப்படையாகவே பிரகடனம் செய்துவிட்டார்! என்று எழுதியிருந்தது. பின் பிரபல பத்திரிக்கைகளும் இதே கோணத்தில் எழுதி, ஏஸியாநெட் தமிழின் கருத்தை வழிமொழிந்தன.
இந்நிலையில் கருணாநிதியை நேற்று சென்று கமல் சந்தித்தார். அப்போதும் ஸ்டாலின் கூடவே நின்றார். ரஜினிக்கே அந்த விறைப்பு காட்டியவர், கமலுக்கு என்னா முறைப்பு காட்டுவாரோ?! என்று பார்த்தால் மனிதர் செம்ம்ம கூலாக ஹேண்டில் பண்ணியிருந்தார்.

கருணாநிதியை சந்திக்க வைக்கும் முன் கமலை தன் வீட்டு சோபாவில் அமர வைத்து அளவளாவியர், பின் அப்பாவிடம் அழைத்து சென்றார். கருணாநிதிக்கு கேட்கும் திறன் வெகுவாக குறைந்துள்ளது. அதனால் எதுவானாலும் அவரது வலது காதருகில் சென்று குனிந்து சப்தமாக சொல்ல வேண்டும். கமலை அவரிடம் அழைத்துச் சென்ற ஸ்டாலின், தானே கருணாநிதியின் வலது காதருகில் சென்று குனிந்து அவரது வருகையின் நோக்கத்தை விளக்கினார். கருணாநிதியும் சிரித்துக் கொண்டார்.

ஆனால் ரஜினி சென்றிருந்தபோது, ஸ்டாலின் இவ்வளவு மெனெக்கெடல்களை செய்யவேயில்லை. தள்ளி நின்று வேடிக்கைதான் பார்த்தார் இறுகிய முகத்தோடு.
இதுமட்டுமில்லாமல், சந்திப்பு முடிந்து கமல் கிளம்பும்போது அவரை வாசல் வரை வந்து வழியனுப்பிவிட்டு, நேர்மறையாக மீடியாவிடம் விளக்கிவிட்டு போனார் ஸ்டாலின்.
ஆக மொத்தத்தில் கோபாலபுரத்தில் வைத்து ரஜினிக்கு முறைத்த முகம் காட்டிய ஸ்டாலின், கமலுக்கு சிரித்த முகம் காட்டியுள்ளார். இதன் மூலம் ரஜினியை தன் அரசியல் எதிரி என்று வெளிச்சமிட்டுள்ளவர், கமலை தன் தோழனாக அங்கீகரித்துள்ளார் என்பது புலனாகிறது.

‘எனது அரசியலில் திராவிடம் இருக்கும். நான் பெரியாரை மதிப்பவன்.’ என்று ஆரம்பித்து, ஆத்திகத்துக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து கமல் வலியுறுத்துவதால், அவை தி.மு.க.வின் சித்தாந்தங்களுக்கு ஒத்து இருப்பதாக ஸ்டாலின் எண்ணலாம். அதனால் அவரிடம் இன்முகம் காட்டலாம்! என்கிறார்கள் சிலர்.
ஆனால் வெகு சில அரசியல் விமர்சகர்களோ ”கமல் அரசியலுக்கு வருவதே, தி.மு.க.வுக்கு உறுதுணையாக நிற்கத்தான். ரஜினியின் அரசியலால் பிரியும் ஓட்டுக்கள் தி.மு.க.வுக்கு பாதகம் செய்துவிடக்கூடாது என்பதற்காகவே கமல் கட்சி துவங்குகிறார்! என்று சொல்லப்படுவதை, ஸ்டாலினின் இந்த நவரச ரியாக்ஷன்கள் உறுதிப்படுத்துகின்றன.” என்கிறார்கள்.
