நடிகர் ரஜினிக்கு திருச்சிக்கு தான் அழைத்து வருவதாக அவரது சகோதரர் சத்யநாராயணராவ் ரசிகர்களுக்கு வாக்குறுதி கொடுத்த இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

தமிழகத்தில் ஆன்மீக பயணத்தில் இருக்கும் நடிகர் ரஜினியின் சகோதரர் சத்யநாராயணா ராவ் கெய்க்வாட் திருச்சி சென்றிருந்தார். திருச்சியில் நடிகர் ரஜினியின் பெற்றோருக்கு ரசிகர்கள் கடந்த ஆண்டு மணிமண்டபம் திறந்து மணி விழா எடுத்து இருந்தனர். இந்த மணிமண்டபத்தை காணவேண்டும் என்கிற ஆவலில் தான் சத்தியநாராயணா திருச்சி சென்றிருந்தார். 

ரஜினியின் சகோதரர் வந்திருப்பதை அறிந்து திருச்சி மட்டுமல்லாமல் கரூர் புதுக்கோட்டை தஞ்சை நாகை திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளும் திருச்சியில் குவிந்திருந்தனர். தடல்புடல் வரவேற்புடன் ரஜினியின் சகோதரரை அவர்கள் மணி மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். மணி மண்டபத்தில் தனது பெற்றோரின் சிலையைக் கண்ட சத்யநாராயண கெய்க்வாட் சிறிது நேரம் உணர்ச்சிப் பெருக்குடன் காணப்பட்டார்.

 

பிறகு தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக் கொண்ட சத்தியநாராயணா மணி மன்றம் அமைத்த ரசிகர்களை அழைத்து நன்றி கூறி நெகிழ வைத்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் தங்கள் தலைவரின் பெற்றோருக்கு மணிமண்டபம் அமைப்பது தங்களின் கடமை என்றும் இதற்கு நன்றி கூறி தங்களை அன்னியப்படுத்தி விட வேண்டாம் என்றும் கூறி பதிலுக்கு சத்யநாராயணாவை நெகிழச்  செய்தனர்.

இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரசிகர்கள் தங்கள் பெற்றோரின் மணிமண்டபத்தை தாங்கள் வந்து பார்த்தது போலவே தங்கள் சகோதரரும் அதாவது எங்கள் தலைவரும் வந்து பார்த்தால் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறியுள்ளனர். அதற்கு என்ன காரணமாக நான் ரஜினி அழைத்து வருகிறேன் என்று கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் சத்தியநாராயணா. தர்பார் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு அரசியல் நிலைப்பாட்டை ரஜினி அறிவித்தாலும் சரி அறிவிக்க விட்டாலும் சரி நிச்சயமாக அவரை இங்கு நான் அழைத்து வருகிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு உள்ள சத்திய நாராயணா. 

இதனைக் கேட்டு புல்லரித்துப்போன ரசிகர்கள் ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை திருச்சியிலிருந்து அறிவிக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்ய ஆயத்தமாகி வருகின்றனர். ரஜினி எப்போதும் தனது சகோதரர் சொல்வதை கட்டுவதே இல்லை என்பதால் இந்த விவகாரத்தில் ரஜினி திருச்சிக்கு வருவார் என்று அனைவரும் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர்.