ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்து ஒரு ஆண்டு நிறைவடைய போகும் நிலையில், தனது கட்சிக்காக புதிய டிவி சேனல் தொடங்க போவதாக செய்திகள் வெளிவருகின்றன. 

இந்நிலையில் அவரை கலாய்த்து நிறைய மீம்கள் சமூக வளையதளங்களில் பரவி வருகின்றன. இருப்பினும் இதனை பொருட்படுத்தாது தனது பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. ஒரு பக்கம் அரசியல் வேலைகள், மற்றொரு பக்கம் சினிமா  என செம்ம பிசியாக உள்ளார். 

அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்தும் தனது கட்சி பெயரையோ அது சம்மந்தப்பட்ட எந்த செய்தியையோ இன்னும் அவர் அறிவிக்கவில்லை. இதனால்  நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ் போட்டு வரும் வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் ஒரு பெட்டிக்கடையில் 'ரஜினி கட்சி ஆரம்பிக்கும் வரை கடன் கிடையாது' என்று அறிவிப்பு பலகை வைத்து வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர கலந்த அதிர்ச்சி கொடுத்துள்ளார் கடை உரிமையாளர். ஏற்கனவே அரசியலுக்கு வருவாரா, வரமாட்டாரா என கலாய்க்கும் இந்த நிலையில் பெட்டிக்கடை ஓனரின் இந்த குசும்பு வலை தளங்களில் செம்ம வைரல்.