பாஜகவை மட்டுமின்றி அவ்வப்போது ரஜினியையும் மறைமுகமாகவும் நேரடியாகவும் கமல் தாக்கி உள்ளார். அவருடைய மனதில் ரஜினி மீது இன்னும் வன்மம் இருப்பதாகவும், வெளியில் நண்பர் போல் காட்டிக் கொண்டாலும் ரஜினியை அவர் எப்போதும் போட்டியாளராகவே கருதி வருவதாகவும் அவருடன் கூட்டணி வைப்பது தேவையில்லாதது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

கமல் கட்சி ஆரம்பித்து ஒரு தேர்தலை சந்தித்து விட்ட நிலையில் முதல் தேர்தலில் 5% கூட வாக்குகள் பெறாத ஒரு செல்வாக்கு இல்லாத கட்சியை வைத்துள்ளதாகவும் அதனுடன் ரஜினி இணைந்து ஒருவேளை வெற்றி பெற்றால் அந்த வெற்றியில் 50% தன்னால் வந்ததுதான் என்று வெற்றிக்கு கமல் உரிமை கொண்டாடுவார் என்றும் எனவே ரஜினி முதலில் அறிவித்தபடி 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடுவதே சரியான முடிவாக இருக்கும் என்றும் ரஜினி ரசிகர்கள் சிலர் டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர்.

கமலுடன் தேவைப்பட்டால் இணைவேன் என்று ரஜினி கூறியிருந்தாலும் கமலுடன் இணைவதை அவர் கடைசி ஆப்ஷனாக வைத்திருப்பதாகவும் இப்போதுவரை அவர் தனித்து போட்டியிடும் மனநிலையில்தான் இருப்பதாகவும் ரஜினி தரப்பில் தெரிவித்து வருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் மட்டுமல்லாமல் பல விஷயங்களில் நடிகர் ரஜினிகாந்த் இப்படித்தான் நழுவுகிறார் என்று கமல்ஹாசன் நேரடியாக விமர்சித்துள்ளார். ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட நிலையில் கமல் மேடைக்கு வருவதற்கு முன் சினேகன்,’’இந்த கூட்டம் மக்களை பயன்படுத்துகிற கூட்டமல்ல, மக்களுக்கு பயன்படும் கூட்டம் என நாம் நிரூபிக்க வேண்டும். இது நானாக சேர்த்த கூட்டம் இல்லை, தானாக சேர்ந்த கூட்டம் என சிலர் டயலாக் பேசலாம், ஆனால் இது தான் உண்மையில் அன்பால் தானாக சேர்ந்த கூட்டம் என கூறியுள்ளார். பாட்ஷா திரைப்படத்தில் ரஜினிகாந்த் இது நானாக சேர்த்த கூட்டம் இல்லை, தானாக சேர்ந்த கூட்டம் என டயலாக் பேசுவார். இந்நிலையில் ரஜினியை தான் சினேகன் விமர்சித்துள்ளார் என சமுகவலைதளங்களில் விவாதிக்கப்பட்டது.

'முதலில் ரஜினி கட்சின் பெயரை அறிவிக்கட்டும். பிறகு ஒரு 150 நாட்கள் போகட்டும். அப்போது அவர்களின் செயல்களில் எனக்கு உடன்பாடில்லை என்றால், அந்தக் கட்சியை விமர்சிப்பேன்’’என ரஜினி மீதான வன்மத்தை கமலும், அவரது ஆதரவாளர்களும் வெளிப்படுத்தி வருவதாக ரஜினி ரசிகர்கள் ஆத்திரமடைந்து வருகின்றனர்.