‘ரஜினி தனது பட ரிலீஸ் சமயங்களில் மட்டும் அரசியல் பேசிவிட்டு அடுத்து அமைதியாகி விடுவார். அவர் எந்தக் காலத்திலும் அரசியலுக்கு வரவே மாட்டார்’என்கிறார் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்த இளங்கோவன் ஒரு அரசியல்வாதியாக கமல்ஹாஸனை நம்பலாம். ஆனால் ரஜினியை நம்பவேண்டியது இல்லை என்கிறார்.

'’கமல் மீது எப்போதும்  எனக்கு தனிப்பட்ட மரியாதை உண்டு. அவர் மதசார்பற்ற கொள்கை உடையவர். தற்போது அவர்  காங்கிரசுக்கு ஆதரவாக இருப்பது வரவேற்கத்தக்கது.  ஆனால் அவர் கூட்டணியில் சேர்வதை ராகுலும், மு.க.ஸ்டாலினும்தான் பேசி முடிவெடுப்பார்கள்.

பலரும் சந்தேகிப்பதைப்போல், கமலுக்கு பின்னால் பா.ஜனதா கிடையாது.  ஆனால் ரஜினிக்கு பின்னால் இருக்கிறது. அவர் அரசியல் செயல்பாடுகளில் அது அப்பட்டமாகத் தெரிகிறது. ஆனால் அவர் எந்தக்காலத்திலும் கட்சி தொடங்குவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அவரது படங்கள் வெளிவரும்போது இப்படி எதையாவது பேசுவார்.

இப்படியே சொல்லி கொண்டிருந்தால் அடுத்தடுத்து தேர்தல் வந்து கொண்டிருக்கும். ஆனால் ரஜினி அரசியல் கட்சி தொடங்கமாட்டார். அப்படி ஒருவேளை அரசியலுக்கு வந்தாலும் பா.ஜனதாவோடு இணைந்தால் மொத்தமாக காணாமல் போய்விடுவார்’’ என்கிறார் ஈ.வி.கே.எஸ்.