Asianet News TamilAsianet News Tamil

ரஜினி அரசியலுக்கும் வரமாட்டார்.. கட்சியும் ஆரம்பிக்கவும் மாட்டார்.. பொளந்து கட்டும் திருமா..!!

நடிகர் ரஜினிகாந்த் சொல்வதைப் போல் எல்லாவற்றையும் சரி செய்துவிட்டு, சீர் செய்துவிட்டு அரசியலுக்கு வருகிறோம் என்று சொன்னால், எந்தக் காலத்திலும் யாராலும் அரசியலுக்கு வர முடியாது. ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று விமர்சனம் செய்திருக்கிறார் விசிக தலைவர் திருமாவளன். 

Rajini will not come to politics .. The party will not start ..
Author
Tamil Nadu, First Published Mar 13, 2020, 8:57 PM IST

T.Balamurukan

நடிகர் ரஜினிகாந்த் சொல்வதைப் போல் எல்லாவற்றையும் சரி செய்துவிட்டு, சீர் செய்துவிட்டு அரசியலுக்கு வருகிறோம் என்று சொன்னால், எந்தக் காலத்திலும் யாராலும் அரசியலுக்கு வர முடியாது. ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று விமர்சனம் செய்திருக்கிறார் விசிக தலைவர் திருமாவளன். 

Rajini will not come to politics .. The party will not start ..

 சென்னையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக 'லீலா பேலஸில்' செய்தியாளர்களை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். அப்போது ,தான் அரசியலுக்கு வந்தால் செயல்படுத்தப் போகும் 3 திட்டங்கள் குறித்துப் பேசினார். 
ரஜினி, 
“முதல் திட்டம், தேவையில்லாத கட்சிப் பதவிகளை வைத்துக் கொள்ளாமல் இருப்பது. தேர்தலுக்கு மட்டும் பதவிகளை உருவாக்கி, ஆட்சிக்கு வந்தால் அந்தப் பதவிகள் நீக்குவது. பதவிகளில் அதிகம் பேர் நியமிக்கப்பட்டால் அது ஊழலுக்கு வழி வகுக்கிறது.
இரண்டாவது திட்டம், 50 வயதுக்குக் கீழே இருக்கும் இளைஞர்களுக்கும் பெரும்பான்மையான வாய்ப்புகளைக் கொடுப்பது.மூன்றாவது திட்டம், கட்சிக்கு ஒரு தலைமை. ஆட்சிக்கு ஒரு தலைமை,” என்று திட்டங்களை அறிவித்தார். 

Rajini will not come to politics .. The party will not start ..

இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ரஜினியின் திட்டங்கள் குறித்து விமர்சனம் செய்துள்ளார்.
 “நடிகர் ரஜினிகாந்த் சொல்வதைப் போல் எல்லாவற்றையும் சரி செய்துவிட்டு, சீர் செய்துவிட்டு அரசியலுக்கு வருகிறோம் என்று சொன்னால், எந்தக் காலத்திலும் யாராலும் அரசியலுக்கு வர முடியாது. அதாவது, குட்டை, குளம் நாறுகிறது என்பதற்காக மீன்கள் தரையில் வாழ்வதில்லை. அந்தக் குட்டையில் இருந்துதான் அதை சுத்தம் செய்கின்றன. அதுபோலதான் அரசியலும் கூட. இறங்கிதான் சுத்தம் செய்ய வேண்டும். தற்போதைய சூழலில் அவர் அரசியல் கட்சித் தொடங்கப்போவதும் இல்லை. பொது வாழ்க்கைக்கு வரப்போவதுமில்லை,” என்று ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து வெளிப்படையாக விமர்சனக் கருத்தை வைத்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios