பீஹாரில் லோக் ஜனசக்தி கட்சி மூலம் காட்டிய சித்து விளையாட்டு போல ரஜினியைப் பலிகடாவாக்க நினைத்தது. தற்போது ரஜினி கட்சி தொடங்கவில்லை என்று சொல்லிவிட்டார். இது பாஜகவின் சித்து விளையாட்டில் மிகப்பெரிய தோல்வி என்று மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில முன்னாள் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

ரஜினி தனது அரசியல் முடிவை இன்று அறிவித்துள்ளது பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில முன்னாள் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “ரஜினிகாந்த் மனப்போராட்டத்தில் இருந்தார். அரசியலில் விருப்பமும் இல்லாமல் இருந்தார். ரஜினி கட்சி தொடங்கும் மனநிலையில் உறுதியாக இல்லை. ஆனாலும் பாஜக தலைவர்கள் அவரை நிர்பந்தித்தால் டிச.31-ல் கட்சி குறித்து அறிவிப்பதாக சொல்லியிருந்தார். இப்போது தொடங்கவில்லை என்று சொல்லிவிட்டார்.