பாஜகவுடன் ரஜினி கூட்டணி வைக்கமாட்டார். தனித்து கட்சி ஆரம்பிப்பது தான் அவரது ஒரே நோக்கம். தனியாக நின்றால் இன்றைய அரசியல் சூழலில் என்ன ரிசல்ட் வரும் என்பதும் அவருக்குத் தெரியும்.  அதனால் தனிக்கட்சி ஆரம்பிக்கும் வரை இதே ட்ராக்கில் தான் போவார் என்கிறார்கள். 

ரஜினிமன்ற நிர்வாகி ஒருவர் கூறும்போது, பாஜகவுடன் கூட்டணி வைத்து தான் அரசியல் செய்ய வேண்டும் என்றால் அதுக்கு நான் கட்சி ஆரம்பிக்காமலேயே இருந்து விடுவேன். அதனால் ரசிகர்கள் யாரும் பயப்படத் தேவையில்லை. என்னை நம்பி இத்தனை வருஷமா இருக்கும் ரசிகர்களை கைவிட மாட்டேன் என்பதிலும் ரஜினி உறுதியாக இருக்கிரார். 234 தொகுதிகளிலும் தனி ஆபீஸ் திறக்கச் சொல்லி இருக்கிறார்’எனக் கூறுகிறார். 

என்ன தான் சொல்ல வருகிறார் என்பதை தெரிந்து கொள்ளவே ரஜினி பிரசாந்த் கிஷோரை சந்தித்தாரே தவிர வேறொன்றும் அந்த சந்திப்பில் இல்லை.  காற்று எந்தப்பக்கம் அடிக்கிறதோ அந்தப்பக்கம் ஒதுங்குவது தான் பிரசாந்த் கிஷோரின் பழக்கம். வருகிற அக்டோபர் மாதம் 28ம் தேதி  குருபெயர்ச்சி நடக்கிறது. தலைவரின் மகர ராசி, திருவோண நட்சத்திரப்படி, அவரது எண்ணப்படி நடக்கும். 

அதைவிட விஷேசமான நான் என்னவென்றால்  ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் ரோகிணி நட்சத்திரம் வரும் நாள் தான் தலைவரின் இஷ்ட சாமியான பாபாஜியின் பிறந்த நாள். இந்த ஆண்டு பாபாஜியின் பிறந்த நாள் டிசம்பர் 11ம் தேதி வருகிறது. அதற்கடுத்து தலைவரை பாபாஜி குகைக்கு அழைத்துச் செல்லும் ஹரியின் மகன் திருமணத்தை பெங்களூருவில் டிசம்பர் 15ம் தேதி நடத்தி வைக்கிறார்.  இப்படி எல்லா சுபநாட்களும் கூடி வருவதால் டிசம்பர் 12ம் தேதி தலைவரின் பிறந்த நாளில் நல்லசேதி வரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.

 

அதே சமயம் கட்சிப் பெயரில் கண்டிப்பாக கழகம் இருக்காது பாரதம், தேசியம் என்ற  அர்த்தத்தில் தான் இருக்கும்  என்கிறார்கள் அவரது ரசிகர் மன்றத்தினர். உண்மையில் ரஜினி மக்கள் மன்றத்தின் கட்சிப்பெயர் முடிவு செய்யப்பட்டு விட்டது.  கட்சியின் பெயர் மன்ற நிர்வாகத்தில் முக்கியப்பொறுப்பில் இருப்பவர்களுக்கு சொல்லப்பட்டு விட்டது. அதன் படி ரஜினி கட்சியின் பெயர் ’தமிழர் தேசிய கட்சி’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.