காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை வேதனை அளிக்கிறது என நடிகர் விஜய் சேதுபதி கருத்து தெரிவித்துள்ளார்


ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற  சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அவர் அங்குள்ள ஒரு தனியார் வானொலிக்கு பேட்டி கொடுத்துள்ளார் அவரின் பேட்டி பின்வருமாறு: 

காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசின் நடவடிக்கை மிகவும் தவறானது, இந்திய அரசின் நடவடிக்கை மனதிற்கு மிகுந்த  வேதனை அளிக்கிறது, பக்கத்து வீட்டுக்காரர்களின்  மீது நாம் அக்கறை செலுத்தலாம் தவறில்லை ஆனால் அவர்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என நாம் ஆளுமை செலுத்தக் கூடாத

ஏற்கனவே காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தந்தை பெரியார் முன்பே சொல்லியுள்ளார் காஷ்மீர் மீது இந்தியா அக்கறை செலுத்தலாமே தவிர ஆளுமை செலுத்த கூடாது. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அந்த மக்களின் வலி புரியாது  

உரிமை பறிக் கொடுக்கும் போதுதான் அந்த வலியை உணர முடியும். இவ்வாறு தன் பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டுக்குரியது, என மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடியை நடிகர் ரஜினிகாந்த் புகழ்ந்து தள்ளியுள்ள நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் சேதுபதி மத்திய அரசின் நடவடிக்கையை  கடுமையாக விமர்சித்திருப்பது  தமிழ் சினிமாவில் மட்டுமல்ல அரசியல் களத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் சேதுபதியின் இந்த கருத்திற்கு பதிலளித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக முழுமையாக தெரிந்து கொள்ளாமல் நடிகர்கள் கருத்துச் சொல்வது கூடாது என  கூறியுள்ளார்.