கட்சி ஆரம்பிக்கப்போவதாக அறிவித்து ஓராண்டு நிறைவடைந்தும் இதோ... அதோ... எனப் போக்குக் கட்டி வரும் ரஜினி படங்களில் நடிப்பதை அதிகரித்து வருகிறார் ரஜினி. இதனால், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அலுத்து வரும் நிலையில் அடுத்த அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறார் ரஜினி. 

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என அவரது ரசிகர்கள் ஏங்கியபோது ’கண்டிப்பா வர்றேன் கண்ணா..’ என்று அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அறிவிப்பு இன்னும் அறிவிப்பாகவே உள்ளது. இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றம் பெயரில் ரஜினியின் ஆங்கில கையெழுத்துடன் ஒரு ‘ஆட்சேபணையில்லா கடிதம்’ ஒன்று சில தினங்களாக இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் ரஜினி டிவி, சூப்பர் ஸ்டார் டிவி மற்றும் தலைவர் டிவி போன்ற பெயர்களைப் பயன்படுத்த ஆட்சேபணை இல்லை என்று ரஜினி தெரிவித்துள்ளதாகக் காணப்படுகிறது. ஆனால் இதுகுறித்து ரஜினி தரப்பிலோ, மக்கள் மன்றத்தின் தலைமை நிர்வாகி சுதாகரோ எந்த அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இதுவரை இது குறித்து கடிதம் ஒன்றே வெளியாகியுள்ளது. இப்போது ரஜினி டிவி ஆரம்பிக்கப்போவதாக வந்த கடிதம் போலி என்று தெரிய வந்துள்ளது.

ரஜினி டிவி ஆரம்பிக்க உள்ளதாக வெளியான தகவல் அலுத்துக் கிடந்த அவரது மக்கள் மன்றத்தினரிடையே உற்சாகத்தை ஊட்டியது. டி.வி ஆரம்பிக்கப்போவதால் விரைவில் கட்சியை ஆரம்பித்து விடுவார் என நம்பிக்கொண்டிருந்தனர் அவரது ரசிகர்கள். ஆனால் அந்தத் தகவல் வதந்தி என தெரிய வந்தவுடன் மீண்டும் மயக்க நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் ரஜினி மக்கள் மன்றத்தினர். 

இந்த நிலையில் ரஜினிகாந்த் குடும்பத்தினருடன் இன்று இரவு அமெரிக்கா செல்கிறார். தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் 15 பயணமாக இன்று அமெரிக்கா செல்கிறார். இந்த பயணம் சிகிச்சைக்காக அல்ல என்றும், ஓய்வு எடுக்கவே என்றும் ரஜினிகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ’’கட்சியை ஆரம்பித்து களப்பணியாற்றினால் மட்டுமே மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும். அவர் படப்பிலும், பயணங்களிலும் மட்டுமே கவனம் செலுத்தி வந்தால் எப்படி மக்களிடையே சென்று சேர்வது? எனப் புலம்பித்தவிக்கின்றனர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்.