ரஜினி 2021ல் சட்டப்பேரவை தேர்தலில் தனது கட்சியை களமிறக்கப்போவது உறுதி என்றும் அவர், கட்சிப்பெயரை தேர்வு செய்து விட்டார் என்றும் தகவல் வெளியாகி வருகின்றன. ஆனால் அவர் எப்போது கட்சியை அறிவிப்பார் என்கிற தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது. 

பாஜகவுடன் ரஜினி கூட்டணி வைக்கமாட்டார். தனித்து கட்சி ஆரம்பிப்பது தான் அவரது ஒரே நோக்கம். தனியாக நின்றால் இன்றைய அரசியல் சூழலில் என்ன ரிசல்ட் வரும் என்பதும் அவருக்குத் தெரியும்.  அதனால் தனிக்கட்சி ஆரம்பிக்கும் வரை இதே ட்ராக்கில் தான் போவார் என்கிறார்கள்.  234 தொகுதிகளிலும் தனி அலுவலகம்  திறக்க உத்தரவிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

காற்று எந்தப்பக்கம் அடிக்கிறதோ அந்தப்பக்கம் ஒதுங்குவது தான் பிரசாந்த் கிஷோரின் வழக்கம். ஆகையால் அவரை கட்சி தொடங்க நாடவில்லை.  டிசம்பர் 12ம் தேதி தலைவரின் பிறந்த நாளில் நல்லசேதி வரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம் என அவரது ரசிகர் மன்றத்தினர் தெரிவித்தாலும் ரஜினி வேறொரு தேதியை குறித்து வைத்திருக்கிறார். 

அதாவது ஏப்ரல் 14ம் தேதி.  தமிழ் மாதத்தின் சித்திரை முதல் நாள். தமிழ்ப் புத்தாண்டு தினம். எனவே அந்த நாளில் ரஜினியின் கட்சி தொடங்கப்பட உள்ளதாக கூறுகிறார்கள். ஏன் பொங்கல் நாளில் கட்சிப் பெயரை அறிவிக்கவில்லை என்று கேள்விகள் எழுந்தாலும் கூட தமிழ்ப் புத்தாண்டு வரும்போது தமிழர்களின் மனதை எளிதாக வென்று விடலாம் என அவரது ஆதரவாளர்கள் சிலர் கூறியுள்ளனர்.

இனிமேல் அவரது பேச்சு, நடவடிக்கை அனைத்தும் தமிழ், தமிழர்கள் என்பதை வைத்தே இருக்கும் எனக் கூறுகிறார்கள். அதனால் தான் தனது கட்சிக்கு அவர் தமிழர் தேசிய கட்சி எனப் பெயர் வைத்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றனர். இதனை அறிந்து கொண்ட பாஜகவும் இத்தனை நாட்களாக தமிழை எதிர்த்து இந்தியை திணிக்க வந்ததை மாற்றி இப்போது தமிழை பெருமையாக பேசி வருகிறது.

 

இனிமேல் தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் விதமாக பாஜக நடந்து கொள்ள உள்ளதாகவும் கூறுகிறார். ஆக மொத்தத்தில் தங்களது ஆதரவு இல்லாமல் ரஜினி கட்சி ஆரம்பித்தால் பாஜக அவர் வழியிலேயே சென்று அரசியல் நடத்தலாம் எனக் கூறுகிறார்கள். ஆக மொத்தத்தில் பாஜகவுக்கு தமிழ், தமிழர்கள் மீது கரிசனம் வரக் காரணம் ரஜினி என்கிறார்கள் இரு தரப்பினரையும் அறிந்த ஆதரவாளர்கள்.