கோவாவில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திராவிட மண்ணில் ஆன்மிக அரசியல் எடுபடாது என அமைச்சர் ஜெயகுமார் ரஜினியின் அரசியலை விமர்சித்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள ரஜினி,  2021 ஆம் சட்டமன்றத்தேர்தலில்  தமிழக மக்கள் அரசியலில் அற்புதத்தை,  அதிசயத்தை 100க்கு 100 சதவிகிதம் நிகழ்த்துவார்கள்.  

கமலுடனான கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் எடுக்கப்பட வேண்டிய முடிவு. யார் முதல்வர் வேட்பாளர் என்பதெல்லாம் அப்போது எடுக்க வேண்டிய முடிவு.  நான் வாங்கிய சிறப்பு விருதுக்கு தமிழ் மக்கள் தான் காரணம். அதனை அவர்களுக்கே சமர்ப்பித்து விடுகிறேன்’’எனத் தெரிவித்தார்.

ரஜினியுடன் அரசியல் கூட்டணி எனக் கணக்குப்போட்டு காத்திருந்த கமலுக்கு ரஜினியின் இந்தப்பேட்டி கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம், கூட்டணியை தேர்தல் நேரத்தில் முடிவு செய்து கொள்ளலாம் என ரஜினி கூறியிருப்பதால், எங்கே கூட்டணி அமைக்காமல் பின் வாங்கி விடுவாரோ என்கிற சந்தாகம் அவருக்கு எழுந்துள்ளது. 

"