ரஜினிகாந்த் அதிரடி திட்டம்!

தமிழக அரசியலில் புதியதாக கட்சி தொடங்கி உள்ள கமல் ஹாசன் மற்றும் கட்சி பணியில் தீவிரமாக ஆன்மீக பயணத்தை மேற்கொண்டுள்ள ரஜினிகாந்த்  அவர்களுக்கும் நீயா நானா போட்டி நிலவுவதை பார்க்க  முடிகிறது.

இருந்த போதிலும்,கமலஹாசன் முந்திக் கொண்டாலும்,அடுத்து ரஜினி ஏன் கொஞ்சம்  மெதுவாக காய்  நகர்த்துகிறார் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது.

இதனை தொடர்ந்து,நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஆன்மீக பயணத்தை மேற்கொண்டு உள்ளார்....அதாவது  இமயமலைக்கு சென்று உள்ளார்.அப்படியே ரிஷிகேஷ் மற்றும் கவுஹாத்தி உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று கடவுள் தரிசனம் செய்து வருகிறார்.

15 நாட்கள் அங்கு தங்க திட்டம் போட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்,தமிழகம் வந்தவுடன்  ஒரு புது பொலிவோடு ஆன்மீக அரசியலில் ஈடுபட உள்ளார் என்று கிசுகிசுக்கப் படுகிறது.

தமிழக அரசியலில் மாற்றம் என்ற சொல்லை முன்னிறுத்தி களம் காண போவதாக கூறியிருக்கும் நடிகர் ரஜினிகாந்த், தான் துவங்கவுள்ள கட்சியின் முதல்வர் வேட்பாளராக தமிழக மக்களால் விரும்பப்படும் ஐஏஎஸ் அதிகாரியை போட்டியிட செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார் என அவருக்குக் மிக நெருக்கமான வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

அந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்தே ரஜினிகாந்த் ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளார் எனவும் தகவல்கள் பரவுகிறது.