Asianet News TamilAsianet News Tamil

மோடியை அதிரவைத்த ரஜினியின் வார்த்தை...! நேற்றே சொன்னது ஏஸியாநெட் தமிழ்! இன்று வழிமொழிகிறார்கள் பாரம்பரிய ஜாம்பவான்கள்!

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியான அன்று இரவில் மும்பைக்கு கிளம்பிய ரஜினி, தன் வீட்டு வாசலில் செய்தியாளர்களை தவிர்த்தார். ஆனால், விமான நிலையத்தில் வைத்து ‘இந்த தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வின் இறங்குமுகத்தை காட்டுகிறது.’என்று ஒரே போடாக போட்டார்.

Rajini stabbed PM Modi
Author
Chennai, First Published Dec 14, 2018, 11:02 AM IST

அரசியலை ஆராய்ச்சி செய்யும் ஊடகங்களுக்கு 'Foreseeing' சாமர்த்தியம் மிக அவசியம். மிக முக்கிய அதிகார மையங்களின் முடிவுகளை முன்கூட்டியே யூகித்து அறிந்து அதை உடைப்பதுதான் ‘Exclusive’. ஏஸியாநெட் தமிழ் நேற்று உடைத்த ஒரு பரபரப்பை இன்று தமிழகத்தின் ஜாம்பவான் ஊடகங்கள் சில வழிமொழிவதுது...’மகிழ்ச்சி’! Rajini stabbed PM Modi

விஷயம் இதுதான்.... ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் பி.ஜே.பி. சந்தித்த சறுக்கலை தமிழகம் கொண்டாடியிருப்பதை ரஜினிகாந்த் உன்னிப்பாக கவனித்ததையும், இதைத்தொடர்ந்து பி.ஜே.பி. தரும் அழுத்தத்தின் பேரில், அவர்களுடன் கூட்டணி வைப்பதற்காகவே விரைந்து தான் கட்சி துவங்குவதாய் இருந்த முடிவை இப்போது அவர் ஒத்தி வைத்துவிட்டதையும், ஹே! பி.ஜே.பி. மேல தமிழர்களுக்கு இவ்ளோ கோபமா?: மிரண்ட ரஜினி, தள்ளிப்போகும் அரசியல்.’ என்ற தலைப்பில் நேற்றுதான் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அரசியல் அரங்கில் அடர்த்தியான அதிர்வுகளை உருவாக்கியது இந்த கட்டுரை. இன்று இதே கான்செப்டை தமிழ் அச்சு ஊடகத்தின் சில ஜாம்பவான்களும் வழி மொழிந்துள்ளனர். அவர்கள் டீல் செய்திருக்கும் விஷயங்களின்  ஹைலைட் பாயிண்டுகள் இதோ...Rajini stabbed PM Modi

* ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியான அன்று இரவில் மும்பைக்கு கிளம்பிய ரஜினி, தன் வீட்டு வாசலில் செய்தியாளர்களை தவிர்த்தார். ஆனால், விமான நிலையத்தில் வைத்து ‘இந்த தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வின் இறங்குமுகத்தை காட்டுகிறது.’என்று ஒரே போடாக போட்டார். 

* போயஸ் முதல் விமான நிலையம் வரையிலான பயணத்தின் போது தனக்கு மிக நெருக்கமான அரசியல் ஆலோசகர்கள் இருவரிடம் மொபைலில், தேர்தல் முடிவு குறித்து பி.ஜே.பி.யை விமர்சிக்கும் தொனியில், இந்த வரியைத்தான் பேசப்போகிறேன்! என்று அதை குறிப்பிட்டு சொல்லி ஆலோசித்துக் கொண்டாராம். அதை அந்த நண்பர்களும் ‘கரெக்ட் இவ்வளவு போதும். இதில் கூடினால் பி.ஜே.பி. உங்கள் மீது ஆத்திரமடையும், குறைந்தால் தமிழ்நாட்டில் உங்களை கடுமையாய் விமர்சிப்பார்கள்.’ என்றார்களாம். 

* ஏர்போர்ட்டில் ரஜினி உதிர்த்த வார்த்தைகள் அடுத்த சில நொடிகளில் அமித்ஷாவின் வழியே மோடியை சென்றடைந்தன. ஏற்கனவே தன் சரிவை தமிழகம் கொண்டாடுவதை கண்டு கடுப்பிலிருந்த பிரதமருக்கு, ரஜினியின் வார்த்தைகள் அப்செட் செய்தன. ஆனாலும் ரஜினியின் சூழலை முழுமையாய் புரிந்து கொண்டிருந்தார் அவர்.  Rajini stabbed PM Modi

* அம்பானி மகள் ஈஷா திருமணத்திற்காக மும்பை சென்ற ரஜினி தங்கியிருந்த இடத்திற்கு 12-ம் தேதி, அதாவது ரஜினியின் பிறந்தநாளன்று பிரதமரின் பிரதிநிதி ஒருவர் வந்து ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, பிரதமர் சார்பாக பொக்கே ஒன்றையும் கொடுத்தார். பிரதமருக்காக இந்த மனிதரின் வருகையானது வெளியில் சொல்லப்படாமல் ரகசியமாய் வைக்கப்பட்டிருந்தது. 

* அந்த நபர் சிறிது நேரம் சிரித்துப் பேசியிருந்துவிட்டு, கிளம்புகையில் ‘எப்ப சார் பார்ட்டி துவங்க போறீங்க? தேர்தல் நெருங்கிடுச்சே!’ என்றாராம். அதுவரையில் நிலவிய சந்தோஷ தருணங்களில் அங்கே அமர்ந்திருந்த  தன் மனைவி லதாவை திரும்பி ரஜினி ஷார்ப்பாய் பார்க்க, அவர் எழுந்து உள் அறைக்குள் சென்றுவிட்டார். Rajini stabbed PM Modi

* பின் அதே ஷார்ப் பார்வையோடு பிரதமரின் பிரதிநிதியை எதிர்கொண்ட ரஜினி, சில நொடிகள் மெளனித்துவிட்டு, பின்  சின்ன புன்னகையுடன், ‘இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை. சூழல் சரியில்லை. நான் இன்னும் நிறைய தயாரானால்தான்  எல்லாமே சரியா நடக்கும் போலிருக்குது. அதனால ஜி!ட்ட இதை ஓப்பனா சொல்லிடுங்க. இன்னும் கொஞ்ச நாளைக்கு இதப்பத்தி நாம பேசவும் வேணாம்.’ என்று தெளிவான இந்தியில் சொல்லி, சட்டென்று கைகூப்பிவிட்டார். அந்த மனிதரும், பதில் வணக்கம் வைத்துவிட்டு ‘ஆல் தி பெஸ்ட் சார்’ என்றபடி வெளியேறிவிட்டார். Rajini stabbed PM Modi

* ரஜினி கணித்தது போலவே அடுத்த சில நொடிகளில் பிரதமரின் கவனத்துக்கு ரஜினியின் பதில் போனது. அமித்ஷாவுக்கும் பகிரப்பட்டது. அவரிடமிருந்து பொன்னாருக்கு தகவல் வர, அவர் பதறிக்கொண்டு ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி அவரை கூல் செய்யும் மூவ்களில் இறங்கினார். ஆனால் ‘நன்றி’ சொன்ன ரஜினி அதன் பின்னும் அசைந்து கொடுக்கவில்லை. 

* கஷ்டகாலத்தில் கைவிரித்துவிட்ட ரஜினி மீது கோபப்படுவதா? அல்லது இந்த சூழலில் அவரது முடிவு சரிதான்! என்று தேற்றிக் கொள்வதா என்று புரியாமல், நாடாளுமன்ற தேர்தலை தமிழகத்தில் எப்படி  கெளரவமாக சமாளிக்கப்போகிறோம்? என்று நோக துவங்கியுள்ளதாம் பி.ஜே.பி.யின் டெல்லி லாபி. இதெப்டியிருக்கு?

Follow Us:
Download App:
  • android
  • ios