அதீத ஊடக வெளிச்சம் மூலம் ஊதிப் பெரிதாக்கப்பட்ட ரஜினிகாந்த் எனும் வெற்றுப்பிம்பம் இனமானத் தமிழர்களால் தூள் தூளாகும் என நாம் தமிழர் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக பகடி செய்துள்ளார்.

 

கோவாவில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திராவிட மண்ணில் ஆன்மிக அரசியல் எடுபடாது என அமைச்சர் ஜெயகுமார் ரஜினியின் அரசியலை விமர்சித்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள ரஜினி,  2021 ஆம் சட்டமன்றத்தேர்தலில்  தமிழக மக்கள் அரசியலில் அற்புதத்தை,  அதிசயத்தை 100க்கு 100 சதவிகிதம் நிகழ்த்துவார்கள்’’எனத் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் ரஜினியின் இந்தப்பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், ’’ஆம்! அதிசயம் நிகழும். தான் என்ன பேசினாலும் அது செய்தியாகும்' என்கிற நினைப்பிலும், மிதப்பிலும் செய்தி அரசியல் செய்து, அதீத ஊடக வெளிச்சம் மூலம் ஊதிப் பெரிதாக்கப்பட்ட ரஜினிகாந்த் எனும் வெற்றுப்பிம்பம் இனமானத் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் அற்புதம் 2021யில் நடக்கும், நடந்தே தீரும்’’எனப் பதிவிட்டுள்ளார்.