Asianet News TamilAsianet News Tamil

இன்றைக்கு, வாய்புளித்ததோ, மாங்காய் புளித்ததோ..? ரஜினியின் குழப்பத்தால் திருமா அதிருப்தி...!

ரஜினி தனது ரசிகர்களுக்கு தெளிவான வழிகாட்டுதல் இல்லாமல், குழப்பமான வழிகாட்டுதலை தந்துள்ளார்: திருமாவளவன். 

Rajini's decision thirumavalavan
Author
Tamil Nadu, First Published Feb 18, 2019, 5:40 PM IST

* தமிழ்நாட்டில் உயர்கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்கிறது. இப்போது கலை மற்றும் அறிவியல் படிப்புகளை படிப்பதிலும் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்: அமைச்சர் அன்பழகன். (ஆனா அதேநேரத்துல பல்கலைக் கழகங்களோட மானம் பப்பரக்கா பப்பாளிக்கான்னு கேவலப்படுறதை பார்த்தீங்களா அமீச்சர் சார்? பாரதியார், காமராசர்ன்னு நல்ல தலைவர்களின் பெயரில் அமைந்திருக்கும் பல்கலைகள் ஊழல்ல ஆரம்பிச்சு பல ‘உல்லாலா உல்லாலாலா’ விஷயத்துலும் அசிங்கப்படுதே. இதுக்கு என்ன பதில்?)

* ராணுவத்தில் உயிரிழப்பவர்களை விட, சாலையில் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். அதனால் ராணுவத்தில் சேர தயங்க கூடாது.: கமல்ஹாசன். (அண்ணே போற பக்கமெல்லாம் டாப் எண்டு மாடல் சொகுசு கார்ல சுத்துற உங்களுக்கு சாலை விபத்துகள் பத்தியெல்லாம் தெரிஞ்சிருக்குறது ஆச்சரியம்தான். ஒரு தபா வந்து பாருங்களேன் நம்ம கவருமெண்டு பஸ்ஸுல.)

* நாடாளுமன்ற தேர்தல் குறித்த ரஜினிகாந்தின் முடிவு பற்றி நான் கருத்து சொன்னால் நன்றாக இருக்காது. அ.தி.மு.க.வுடனான எங்களின் கூட்டணி பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன். (தலைவரே நீங்க மத்தியமைச்சராக இருக்குற விஷயமாவது உங்களுக்கு தெரியுமா தெரியாதா? இல்ல அதைப் பத்தி பேசவும் உங்ககிட்ட கருத்து இல்லையா?ஆமா அ.தி.மு.க. கூட்டணி பற்றி கருத்து சொல்ல விரும்பலைன்னு நீங்க சொல்றத பார்த்தா, அந்த கூட்டணியில உங்களுக்கு விருப்பமில்லையோ?)

* விரக்தி அடைந்த தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்ததன் வெளிப்பாடே புல்வாமா தாக்குதல்: ராஜ்நாத் சிங். (ஆக, வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்றில்லாமல் இன்றைக்கு ....புல்வாமா சம்பவத்தில் மத்திய அரசை குறை கூற எந்த வாய்ப்பும் இல்லைன்னு சொல்றீங்க அப்படித்தானே?)

* ரஜினி தனது ரசிகர்களுக்கு தெளிவான வழிகாட்டுதல் இல்லாமல், குழப்பமான வழிகாட்டுதலை தந்துள்ளார்: திருமாவளவன். (நமக்கு எதுக்குண்ணே இந்த கமெண்ட்ஸ்லாம்? நாமளே கடந்த ஒரு வருஷமா ஒட்டி உறவாடியும், இன்னமும் தி.மு.க.கூட்டணியில இருக்கோமா இல்லையான்னு புரியாத நிலையில குழம்பிக் கெடக்குறோம்! இப்ப அடுத்தவனை நோண்டனுமா?)

Follow Us:
Download App:
  • android
  • ios