திருப்பூர் மாவட்டம்  அவிநாசியில் நடிகர் ரஜினிகாந்த்  பிறந்தநாளை முன்னிட்டு 12 ஜோடிகளுக்கான இலவச திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சத்தியநாராயணராவ் வந்திருந்திருந்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ரஜினி அடுத்தாண்டு ஏப்ரலில் கட்சி துவங்குவது பற்றி உறுதியான அறிவிப்பு வெளியாகும். அதற்கான திட்ட வடிவமும் செயல் வடிவமும் தயார்நிலையில் உள்ளது. 

ரஜினி தனித்தே கட்சி துவங்குவார் யாரையும் சார்ந்திருக்க மாட்டார். ஒரு சிலர் பாஜகவுக்கு ஆதரவாக இருப்பார் என்று கூறி வருகின்றனர். அது தவறு. திராவிட கட்சிகளுக்கும் ஆதரவாக இருக்கமாட்டார் . நட்பு ரீதியாக பல கட்சியினர் ரஜினிகாந்தை சந்தித்து வருகின்றனர் என்றும் சத்தியநாராயணராவ் தெரிவித்தார்.