முட்டையும் முட்டையும் சேர்ந்தால் முட்டைதான் என ரஜினி, கமல் இணைவது குறித்து அமைச்சர் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.

தேவை ஏற்பட்டால் கமலுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுவோம் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் நலனுக்காக இணைந்து செயல்பட தயார் என ரஜினி, கமல் தெரிவித்திருந்தது குறித்து, முட்டையும் முட்டையும் சேர்ந்தால் முட்டைதான் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சரிடம், ரஜினியும், கமலும் தெரிவித்திருந்த கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.இதற்கு பதிலளித்து பேசுகையில் ’’ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் தான் இரண்டு, முட்டையும் முட்டையும் சேர்ந்தால் முட்டை தான். ஒன்றும் ஜீரோவும்  சேர்ந்தால் தான் அது நம்பர். யாரு முட்டை, யாரு நம்பர் என நான் சொல்லவில்லை: என விமர்சித்த அமைச்சர், அதனை இந்த மொட்டை சொல்கிறேன் என நகைச்சுவையாக தெரிவித்தார்.