ரஜினிகாந்த் விரைவில் தன்னுடைய கட்சியை அறிவிப்பார் என்றார். தற்போது அவர் கமிட் செய்துள்ள இரண்டு படங்களை விரைவில் முடித்துவிட்டு அடுத்த ஆண்டு துவக்கத்தில் முழுநேர அரசியலில் ரஜினி தீவிரம் காட்ட உள்ளார் என சொல்லப்பட்டது ஆனால் அவர், மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் க்ரைம் திரில்லர் படமான தர்பார் படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க யோகி பாபு காமெடியனாக நடிக்கிறார். இதுவரை வெளிவந்த ரஜினிகாந்த் படங்களிலேயே இப்படி ஒரு படம் வந்திருக்கவே கூடாதுன்னு ரஜினிகாந்த் காப்பான் இசை வெளியீட்டு விழாவில் சொன்னதைபோல படக்குழு இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விறுவிறுப்பாக வேலை பார்த்து வருகிறது. மூன்று கெட்டப்பில் நடித்த மூன்றுமுகம், பாண்டியன் படத்திற்கு ரஜினி போலீசாக நடிக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் எதிர்பார்ப்பும் எகிற வைத்துள்ளது. 


 
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், புதிய படம் ஒன்றில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியதை அடுத்து தற்போது இன்னொரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. அதாவது, தர்பார் படத்தை தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பில் இருந்த சமயத்தில் ரஜினியிடம் கதை சொல்லி ஓகே வாங்கினாராம் முருகதாஸ், முழுக்க முழுக்க ரமணா போல விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல், முதல்வன் போல அரசியல் நெடி வீசும் அளவிற்கு ஸ்ட்ராங் ஆக ஒரு அரசியல் படமாக உருவாக உள்ளதாம், இந்த படத்தையும் லைகா நிறுவனமே தயாரிக்கும் என சொல்லப்படுகிறது.

ஏற்கனவே, இயக்குனர் சிறுத்தை சிவா படத்தில் நடிப்பதாக சொல்லப்பட்ட நிலையில், சூர்யா நடிக்கவிருந்த படத்தின் வேலைகளை ஒதுக்கி வைத்து இயக்குநர் சிவா ரஜினி படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.ஆனால், ரஜினி தர்பார் படத்தின் ஷூட்டிங் சமயத்தில் ஏ ஆர் முருகதாஸ் ரஜினியிடம் மீண்டும் ஒரு கதை ஓகே வாங்கிவிட, இந்த கூட்டணி அடுத்தும் தொடரும் என சொல்லப்படுகிறது. தொடர்ந்து கதை திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் முருகதாஸ் இப்போ ரஜினியிடம் சொன்னதாச்சும் சொந்த கதையா? இல்ல அதுவும் ஆட்டையை போட்டதா என கோடம்பாக்கமே நொந்து கிடைக்கிறதாம்.