தமிழகத்தில் அதிமுகவை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியில் கிட்டத்தட்ட வெற்றி பெற்றுள்ள பாஜக, அடுத்து கட்சியின் தலைவராக ரஜினியை நியமித்து எதிர்வரும் நாடாளுமனறத் தேர்தலை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அனைத்து நடவடிக்கைகளும் முடிந்துவிட்ட நிலையில், ரஜினியின் சம்மதத்திற்காக மட்டுமே காத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் றெக்க கட்டி பறக்கிறது.
எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நினைப்புடன் செயல்பட்டு வரும் பாஜக எப்படியாவது மீண்டும் மத்திய அரசில் உட்கார்ந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய அக்கட்சி தயாராக உள்ளது. மேலும் பாஜகவின் கண்கள் கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தின் மீது உள்ளது.

அவர்களுக்கு ஏற்ற மாதிரி ஜெயலலிதா மறைந்துவிட்டதால், அதிமுகவை தற்போது முழுவதுமாக தனது பிடிக்குள் கொண்டுவந்துவிட்டது பாஜக. இந்நிலையில்தான் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது
தமிழகத்தின்அரசியல்களம், என்பது கடந்தஐம்பதுஆண்டுகளாகதி.மு.க, அ.தி.மு.கஆகிய இரண்டு திராவிட கட்சிகளை மட்டுமே நம்பி இருகிறது. ஆனால் அந்தக் கட்சிகளின் பெரும் ஆளுமைகளான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இல்லாத நிலையில் இது தான் தகுந்த சமயம் என்று பாஜக தமிழகத்தில் காலூன்ற வலுவாக திட்டமிட்டு காரியத்தில் இறங்கியுள்ளது.

இதற்கு துருப்புச் சீட்டாக அவர்கள் பயன்படுத்த நினைப்பது ரஜினியைத் தான். திமுகவைப் பொறுத்தவரை அதன் தலைவர் ஸ்டாலின்தான் என்பது முடிவாகிவிட்டது, ஆனால் அதிமுக அப்படி இல்லை இபிஎஸ், ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன் என பிரிந்து கிடக்கிறது. அங்கு ஒரு ஸ்டாராங்கான தவைவர் இல்லை என்பதுதான் உண்மை.
அந்தஇடத்தில்தான்ரஜினியைவைத்துஅழகுபார்த்துவிடவேண்டும்என்றுபிரம்மப்பிரயத்தனம்செய்துவருகிறதுபி.ஜே.பி. இதற்காகஏகப்பட்டஅஸ்திரங்களையும்வீசியபடியேஇருக்கிறது. ஆனால், ரஜினியிடமிருந்துதான்உறுதியானபதில்இல்லை.

ஆனாலும் ரஜினியும்சரி... பி.ஜே.பி., அ.தி.மு.க-வும்சரி... இதுவரைஇதுகுறித்துஉலா வரும் செய்திகளுக்கு மறுப்புஎதையும்தெரிவிக்கவில்லை. பாஜகவின் அசைன்மெண்ட்டே தமிழகத்தில்தி.மு.ககூட்டணிக்குமாற்றாகவலுவானகூட்டணியைஉருவாக்கவேண்டும்என்பதுதான்.

அதற்குஅவர்களுக்குரஜினிவேண்டும். அவர்தலைமையில்ஒருங்கிணைந்தஅ.தி.மு.க (தினகரன்உட்பட), பி.ஜே.பி, டாக்டர்கிருஷ்ணசாமியின்புதியதமிழகம்உள்ளிட்டசிலகட்சிகள்இடம்பெறும்கூட்டணியைஉருவாக்கவேண்டும். இதுதான்பி.ஜே.பி-யின்மெகாபிளான். இப்படியொருஅணிதான், தமிழகத்தில்பலமானஅணியாகஇருக்கும்என்றுவெகுவாகநம்புகின்றனர்டெல்லிபி.ஜே.பிதலைவர்கள்,

இந்த கூட்டணியில் தினகரனை இணைக்கும் பணியை சிபிஐ, வருமான வரித்துறை போன்றவற்றை வைத்து செய்து கொள்ளலாம் என்ற முடிவில் பாஜக அரசு உள்ளது.
அதிமுகவைப் பொறுத்தவரை பாஜக என்ன நினைகிறதோ அதைச்செய்துகொடுப்பதைத்அந்த கட்சிதயாராக உள்ளது. இப்படியான ஒரு சூழ்நிலையை பாஜக கச்சிதமாக உருவாக்கி வைத்துள்ளது என்றே கூறப்படுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழகத்தை சேர்ந்த, அனைவருக்கும் தெரிந்த முக்கிய பிரமுகர் ஒருவரை பாஜக நியமித்து அதற்கான வேலைகள் ஜரூராக நடைபெற்று வருகிறது. இதெல்லாம் நடக்க சத்தியமாக வாய்ப்பு உண்டு….ஆனால் அது ரஜினியின் கைகளில் தான் உள்ளது.
