Asianet News TamilAsianet News Tamil

அமித் ஷாவை முதன்முறையாக எதிர்க்கும் ரஜினி... இந்தியை எதிர்த்து ஆவேசம்..!

இந்தி திணிப்பை வட இந்தியாவில் கூட பல மாநிலங்களில் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என நடிகர் ரஜினிகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

Rajini is the first to oppose Amit Shah
Author
Tamil Nadu, First Published Sep 18, 2019, 12:37 PM IST

இந்தி திணிப்பை வட இந்தியாவில் கூட பல மாநிலங்களில் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என நடிகர் ரஜினிகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். Rajini is the first to oppose Amit Shah

இந்தி தினத்தை முன்னிட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியை நாட்டின் ஒரே மொழியாக்க வேண்டும். அப்போது தான் இந்தியா வளர்ச்சி அடையும்’ என தெரிவித்து இருந்தார். இதற்கு தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பலமான எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.Rajini is the first to oppose Amit Shah

இந்நிலையில், இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, ‘’இந்தியை திணித்தால் தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்தியை திணித்தால் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்தியை திணித்தால் தமிழகம் உட்பட தென்னிந்தியாவில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.  இந்தியாவில் பொதுவான மொழியை துரதிஷ்டவசமாக இந்தியை கொண்டு வர முடியாது. இந்தி திணிப்பை வட இந்தியாவில் கூட பல மாநிலங்களில் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.  பொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கு நல்லது’’எனத் தெரிவித்தார். Rajini is the first to oppose Amit Shah

பாஜக ஆதரவாளராக கருதப்பட்டு வந்த அவர் பாஜக அறிவிக்கும் திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்தார். சமீபத்தில் சென்னையில் நடந்த விழாவில், கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த் ‘அமித் ஷாவும், மோடியும்  கிருஷ்ணர்- அர்ஜுனர் போன்றவர்கள். அவர்களில் யார் கிருஷ்ணர், அர்ஜுனர் என்பது அவர்களுக்கே தெரியும்’’எனப் பாராட்டினார். அடுத்து பாஜக ஆதரவுடன் கட்சி ஆரம்பிக்கப்போவதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு கூறி முதன்முறையாக அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.    
 

Follow Us:
Download App:
  • android
  • ios