தனது ரசிகர்களுடனான சந்திப்பில் நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்திருந்தார். ஆனால் அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் அவர் கட்சி தொடங்கவில்லை. தனது பட வேலைகளில் தீவிரமாக செயலாற்றி வருகிறார்.

ஆனால் அடிமட்ட அளவில் இருந்து தொண்டர்களை ஒருங்கிணைக்கும் பணிகளை அவர் செய்து வருவதாகவும் விரைவில் அரசியல் கட்சி பெயரை அறிவிப்பார் என்றும் ரஜினி மக்கள் மன்ற முக்கிய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் மும்பையில் இருந்து விமானத்தில் சென்னை திரும்பிய அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது டிசம்பரில் அரசியல் கட்சி தொடங்குவீர்களா என்கிற கேள்வி நடிகர் ரஜினி காந்த் பதிலளிக்க மறுத்து அமைதியாக சென்று விட்டார்.

மேலும் தர்பார் படம் எப்படி வந்திருக்கிறது என்று கேட்டநிருபர்களிடம் படம் மிக நன்றாக வந்திருப்பதாக தெரிவித்தார்.

விரைவில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், ரஜினி இன்னமும் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடாமல் இருப்பது அவரது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.