Asianet News TamilAsianet News Tamil

சேட்டுக்கே வட்டிக்கு விட்ட ரஜினி...!! நோண்டி நொங்கு எடுக்கும் ஐடி டிபார்ட்மெணெட்...!!

கடந்த 2002- 2003 ஆம் ஆண்டில் ஆறு பேருக்கு அதாவது 2 கோடியே 63 லட்சம் கடன் வழங்கினேன் ,   அதில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்  கிடைத்தது , நிகர வருமானமான ஒரு லட்சத்து 19 ஆயிரம்  ரூபாய்க்கு அப்போதே வரி செலுத்தி விட்டேன் . 

rajini gave money for interest to marvadis - now income tax investigation going
Author
Chennai, First Published Jan 30, 2020, 2:49 PM IST

நடிகர் ரஜினிகாந்த் வருமான  வரித்துறையிடம் தாக்கல் செய்துள்ள மனுவில் அவர் யார் யாருக்கு கடன் கொடுத்தார் அதில் வந்த வட்டி என்ன என்பது குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன,  அதில் பல  மார்வாடிகளுக்கு அவர்  பணம் கொடுத்து இருப்பது தெரியவந்துள்ளது . அரசியல் கட்சி தொடங்கப் போகிறேன் என அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் சமீபகாலமாக சர்ச்சைமேல் சர்ச்சையில் சிக்கி வருகிறார் ,  சினிமா பாணியில் தன் அதிரடி பேச்சுகளால்  பிரச்சினைகளை வாரி தலைமேல் போட்டுக்கொள்ளும் ரஜினி அதிலிருந்து  மீள முடியாமல் தவித்து வருகிறார்.   பெரியார் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய ரஜினி அதில் இருந்து மீள்வதற்குள் வருமான வரித்துறை பூதம் அவரை விடாமல் சுழற்றி அடித்து வருகிறது .அந்த வழக்கிலிருந்து அவர் விடுபட்டாலும் ,  அதில் அவர் தெரிவித்துள்ள வாக்குமூலங்கள் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . 

rajini gave money for interest to marvadis - now income tax investigation going

கடந்த 2002-2003 மற்றும் 2004 - 2005 ஆகிய ஆண்டுகளுக்கான  வருமானத்தை மறைத்த ரஜினி காந்த் அதில் வரி ஏய்ப்பு  செய்தார் எனக்கூறி அவருக்கு வருமானவரித்துறை அபராதம் விதித்திருந்தது , ஆனால்  நடிகர் ரஜினிகாந்த் அந்த அபராதத் தொகைகளை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்ததால்  கடந்த 2014ஆம்  ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில்  சார்பில் அவர்  மீது வருமான வரித் துறை வரிவிதிப்பு வழக்கு தொடர்ந்தது  இந்நிலையில் ரஜினி வருமான வரித்துறையில் தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில் அவர் மீது தொடரப்பட்ட வரி ஏய்ப்பு  வழக்கை வருமானவரித்துறை வாபஸ் பெற்றுள்ளது,  அதாவது  அவர் வருமானத் துறை அலுவலகத்தில் தாக்கல் செய்துள்ள  மனுவின் விவரம்:- 

rajini gave money for interest to marvadis - now income tax investigation going

கடந்த 2002- 2003 ஆம் ஆண்டில் ஆறு பேருக்கு அதாவது 2 கோடியே 63 லட்சம் கடன் வழங்கினேன் ,   அதில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் கிடைத்தது , நிகர வருமானமான ஒரு லட்சத்து 19 ஆயிரம்  ரூபாய்க்கு அப்போதே வரி செலுத்தி விட்டேன் .  அதேபோல கோபாலகிருஷ்ண ரெட்டிக்கு 18 சதவீத வட்டியில் ரூபாய் ஒரு கோடியே 95 லட்சம் கொடுத்தேன் ,  அர்ஜூன் லால் ,  சசி பூஷண் , சோனி பிரதாப் ,  ஆகியிருக்கு 68 லட்சம் கொடுத்துள்ளேன் .  2003- 2004 ஆம் ஆண்டில் முரளி பிரசாத் அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் கடன் கொடுத்தேன் ,  அதற்கு அடுத்த ஆண்டில் அதாவது 2004- 2000ஆம் ஆண்டில் கடனாக கொடுத்த ஒரு கோடியே 71 லட்சம் பணம் திரும்பி வரவில்லை ,  அதனால் நான் வட்டிக்கு கொடுத்ததில் 33 லட்சத்து 93 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டது என நடிகர் ரஜினிகாந்த் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.  அதாவது தன் மீதான வரி ஏய்ப்பு  புகாரில் இருந்து விடுபட ரஜினி  கந்துவட்டி விவகாரத்தை வருமானவரி இடம் உடைத்துள்ள தகவல் வெளியாகி வேகமாக பரவி வருகிறது .

 

Follow Us:
Download App:
  • android
  • ios