தங்களை அக்மார்க் ‘பகுத்தறிவு அரசியல்வாதிகள்’ என்று சொல்லிக் கொண்ட தலைவர்களே, பின்வாசல் வழியாக ஜோசியர்களை வரவழைத்து ஜாதகம் பார்ப்பது, மாறு வேஷத்தில் சென்று பரிகாரம் செய்வது, பினாமியை அனுப்பி யாகம் நடத்துவது என்று இருந்தார்கள், இருக்கிறார்கள். 

ஆனால் கட்சி துவங்கும் முன்பே ‘என்னுடையது, ஆன்மிக அரசியல்’ என்று வெளிப்படையாக அறிவித்திருக்கும் ரஜினிகாந்த், ஜோசியத்தின் பின்னே செல்லாமல் இருப்பாரா என்ன? ரஜினியின் அரசியல் மூவ்கள் ஒவ்வொன்றும் நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், சந்திராஷ்டமம், அஷ்டமி - நவமி, அமாவாசை, சூலம், குரு பெயர்ச்சி இவையெல்லாவற்றையும் தொட்டே முடிவாகிறது. கட்சியின் பெயர் முதல் கொடி கலர், டிஸைன் வரை எல்லாமே ஜோசியர் வழிகாட்டுதல் படியே அமைக்கிறார் ரஜினி! என்று அவரது நெருக்கமான வட்டாரங்களே சிலாகிக்கின்றன. 

இந்நிலையில், சமீபத்தில் குடும்பத்துடன் அமெரிக்கா கிளம்பிய ரஜினி, அதற்கு சில நாட்களுக்கு முன் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் பிரபலமான ஒரு ஜோதிடரைச் சந்தித்தாராம். அவர் சொன்ன வார்த்தைகள் தலைவனுக்கு அப்டியே தலைசுற்றலை கிளப்பிவிட்டதாம். 

அப்படி என்னதான் சொன்னார் ஜோஸியர்?...

* சித்தர் போல வாழ ஆசைப்படும் உங்களுக்கு அரசியலில் வெற்றி கிடைக்காது. மகுடம் தரிக்க நீங்கள் ஆசைப்படுவது, உங்கள் மனசாட்சிக்கு விரோதமானது. பற்றுக்களை அறுத்தெறிய விரும்பும் உங்களை எப்படி கிரீடம் வந்து சேரும்?

* ஆனால் உங்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசியலில் உச்ச யோகம் இருக்கிறது. அது, உங்கள் மூத்த மகள் ஐஸ்வர்யாதான். அவரால்தான் உங்களது சினிமா ஜாதகம் இன்னமும் உச்சத்தில் இருக்கிறது. ஐஸ்வர்யாவின் ஆசியாலும், அணுகிரகத்தாலும்தான் ரஜினி எனும் நடிகர் இன்னமும் சரியா புகழுடன் சாதித்துக் கொண்டிருக்கிறார். அந்த ஐஸ்வர்யாவை உங்களது கட்சியில் முன்னிலைப்படுத்தி அரசியல் துவங்கினால் நிச்சயம் உங்கள் கட்சி பெரும் வெற்றியைத் தொடும்.  

* அதைவிட்டு நீங்கள் முன்னாடி நிற்க ஆசைப்பட்டால், அது தோல்வியில் மட்டுமே முடியும்.- இதுதான் ஜோஸியர் சொன்ன தகவல்களாம். இந்த தகவல் ரஜினியின் உள் வட்டாரத்தினுள் முதலில் பரவி, பிறகு ராகவேந்திரா அலுவலக நண்பர்கள் வட்டாரத்தினுள்ளும் பரவியிருக்கிறது. இதைக் கேள்விப்பட்டு குறும்பாய் சிரிந்த அந்த நபர்கள், ஐஸ்மா அரசியல் தலைவியாகி ஆட்சியைப் பிடிச்சா, மாப்ள தனுஷுக்கு என்ன துறை கொடுப்பாங்க? பொதுப்பணியா  இல்ல நிதித்துறையா? என்று கலாய்த்தார்களாம். அட இதையெல்லாம் விட்டுத்தள்ளுங்கள், தனுஷின் ஜாதகத்துக்கு அவரெல்லாம் சி.எம். ஆனாலும் ஆச்சரியமில்லைதானே!