rajini and ranjith who is using who

ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்காக காலா திரைப்படம் எடுக்கப்படவில்லை என்றும் மக்களின் பிரச்னைகளை பேசும் மக்களுக்கான படம் காலா என்றும் இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்கு வந்துள்ள படம் காலா. ரஞ்சித் இயக்கத்தில் ஏற்கனவே ரஜினிகாந்த் கபாலி படத்தில் நடித்துள்ளார். மீண்டும் இருவரும் காலா படத்தில் இணைந்துள்ளனர். தனது படங்களின் வாயிலாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலை பேசுபவர் ரஞ்சித். கபாலி திரைப்படம் ரஜினியின் படமாக இல்லை. அது ரஞ்சித்தின் படமாகவே இருந்தது என்ற கருத்துகள் பரவலாக எழுந்தன.

இந்த வசனங்கள் ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு மெருகேற்றும் வகையில் அமைந்துள்ளன. அதேநேரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலை பேசினாலும், அதை சாதாரண நடிகர் பேசுவதை காட்டிலும், ரஜினி போன்ற மாஸ் ஹீரோ பேசுவதன் மூலம் அதன் தாக்கம் அதிகமாகவும் வீரியம் மிக்கதாகவும் இருக்கும். 

எனவே தனது அரசியலை பேச ரஞ்சித், ரஜினியை பயன்படுத்தி கொள்கிறாரா..? அல்லது ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு ஏற்ற வகையில் ரஞ்சித்தை அவர் பயன்படுத்தி கொள்கிறாரா..? என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. 

பொதுத்தளத்தில் எழுந்துள்ள இந்த கேள்விக்கு, ரஞ்சித்தின் ஒரு கருத்தின் மூலம் பதில் கிடைத்துள்ளது. காலா திரைப்படம் இன்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் ரசிகர்களுடன் சிறிது நேரம் படம் பார்த்த இயக்குநர் பா.ரஞ்சித், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, காலா திரைப்படம் ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்காக எடுக்கப்பட்ட படம் அல்ல; இது மக்களின் பிரச்னைகளை பேசும் மக்களுக்கான படம் என கூறினார். 

இதன்மூலம் ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்காகவும் அவரது பிம்பத்தையும் அவர் மீதான மதிப்பையும் உயர்த்துவதற்காக இந்த படம் எடுக்கப்படவில்லை. ரஜினி என்னை பயன்படுத்தி கொள்ளவில்லை என்பதை மறைமுகமாக ரஞ்சித் தெரிவித்துள்ளார். தான் சொல்ல நினைக்கும் கருத்துகளை ரஜினி என்ற மாஸ் ஹீரோவின் வாயிலாக ரஞ்சித் மக்கள் மத்தியில் ஆழப்பதிக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ரஜினிக்காக காலா எடுக்கப்படவில்லை என்றாலும் ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு இந்த படம் எள்ளளவும் பயன்படாது என்று கூறமுடியாது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் கருத்துகளின் தாக்கத்தை ரஜினியும் அறுவடை செய்கிறார் என்பதே உண்மை. ரஜினிக்காக பிரத்யேகமாக இந்த படம் உருவாக்கப்படவில்லை என்றாலும் ரஜினிக்கும் அது பயன்படும்.

இதன்மூலம் இருவரும் தங்கள் அரசியலுக்கு பரஸ்பரம் பயன்படுத்தி கொள்கின்றனர் என்றுதான் புரிந்துகொள்ள முடிகிறது.