சேலம் மாவட்ட திமுகவில் மிக சக்தி வாய்ந்த மனிதராக திகழ்ந்தவர் வீரபாண்டி ஆறுமுகம்.  மறைந்த கருணாநிதிக்கு மிகவும் நெருங்கிய நண்பராக இருந்த வீரபாண்டி ஆறுமுகத்துக்கு அவரது மாவட்டத்திலேயே டஃப் கொடுத்தவர், அதே மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய திமுக பிரமுகர் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன்.

வழக்கறிஞரான இவர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு எதிராக அரசியல் செய்தவர். ஆனால் வீரபாண்டி ஆறுமுகம்  உயிருடன் இருந்தவரை வரை ராஜேந்திரன் சற்று அடக்கியே வாசித்தார். அதே நேரத்தில் மு.க.ஸ்டாலின், ராஜேந்திரனுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தார்.

வீரபாண்டி ஆறுமுகம்  மறைவையடுத்து அவரது மகன் வீரபாண்டி ராஜா,அவரது வாரிசாக உருவெடுத்தார். ஆனாலும் ராஜேந்திரனுக்கு ஸ்டாலினின் மறைமுக ஆதரவு இருந்ததால் சேலம் மாவட்டத்தில், கடந்த தேர்தலில் சேலம் வடக்கு தொகுதியில் போடியிட்டு சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.

இந்நிலையில் வழக்கறிஞர் ராஜேந்திரனுக்கு திடீர் என இன்று மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டு சிகிச்சை பெற்ற வருகிறார். அவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து நலம் விசாரித்தார்..