விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சந்திர பிரபா, ராஜவர்மன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நாங்கள் அவர்களை அடித்து வெளுத்து சட்டையை கிழிப்போம் என்று தெரிந்துதான் திமுக நம்பிக்கையில்லா தீர்மானத்தை வாபஸ் வாங்கியது என கூறினார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வா வா , மல்லுக்கு வா, சண்டைக்கு வா, மோதிப் பார்ப்போம் எனக் கூறிய ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார் .
ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமான திமுகவை இருக்கும் இடம் தெரியாமல் அழித்துவிடுவோம். 

ஜெயலலிதாவை தனி கோர்ட் அமைத்து சிறையில் அடைக்க காரணமாக இருந்த ப.சிதம்பரம், நீ தோண்டிய படு குழியில் நீயே விழுந்துவிட்டாய் என எல்லோரையும் ஒருமையில் பேசி அதிர வைத்தார்.