"ரொம்ப கண் திருஷ்டியா இருக்கு... என் உருவ பொம்மையை எரித்துக்கொள்ளுங்கள்"...!காங்கிரசை பயங்கரமா கலாய்த்த ராஜேந்திர பாலாஜி ...! 

விருதுநகர் மாவட்டத்திலுள்ள நரிக்குடி அருகே வீரசோழனில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி பல்வேறு கருத்துகளை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அப்போது அதிமுகவை பற்றி தெரிவித்த ராஜேந்திரபாலாஜி, "இளைய சமுதாயம் மிகவும் ஆர்வமாக வந்து சேரும் இயக்கமாக அதிமுக இருக்கின்றது; இனி வரும் அனைத்து தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெறும்; நடைபெறவுள்ள விக்கிரவாண்டி நாங்குநேரி தேர்தலிலும் அமோக வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.தொடர்ந்து பேசிய அமைச்சர் மத்திய அரசுடன் எங்களுக்கு உடன்பாடு ஏற்பட்டால் உடனடியாக திமுக பாஜகவுடன் கூட்டணி வைக்க ஆர்வமாக உள்ளது.. உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும்; அதிமுக அனைத்து இடங்களையும் கைப்பற்றும்; மக்களின் மனமாற்றத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது; காங்கிரஸ் கட்சியினர் என்னுடைய உருவபொம்மையை எரித்து எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்; இருக்கட்டும்... ஏனென்றால் எனக்கு கண்திருஷ்டிஅதிகமாக உள்ளது என கூறி உள்ளார்