Asianet News TamilAsianet News Tamil

தேமுதிகவைக் கழுத்தறுப்போம்…. விஜயகாந்த்தை கிழித்து தொங்கவிட்ட ராஜேந்திர பாலாஜி !!

காலப் புடிக்கலாம், கையப் பிடிக்கலாம் ஆனால் தோள் மேல ஏறி உட்கார்ந்து கொண்டு காதைக் கடிக்க வந்தால் சும்மா இருக்க மாட்டோம்  கழுத்தறுத்திடுவோம் என தேமுதிகவுக்கு அமைச்சர் ராஜேந்தி பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

rajendra balaji talk tuff
Author
Sivakasi, First Published Feb 26, 2019, 9:29 AM IST

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் உருவாக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. மேலும் தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகளை இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

rajendra balaji talk tuff

தேமுதிகவுடன் பேச்சு நடத்தி வரும் அதிமுக, அவர்களின் டிமாண்டை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். 7 எம்.பி. தொகுதியும், 8 எம்எல்ஏ தொகுதியையும் கேட்டு தேமுதிக பிடிவாதம் பிடித்து வருகிறது. இதையடுத்து பேச்சு வார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.

rajendra balaji talk tuff
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் போன்றோர் தேமுதிகவுடன் சுமூகமான பேச்சு வார்த்தை நடைபெறுகிறது என்று சொன்னாலும் உள்ளுக்குள் அனல் கொதித்துக் கொண்டிருக்கிறது.

தேமுதிகவுடன் கூட்டணி குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயகுமார், அதிமுக கூட்டணிக்குள் தேமுதிக வந்தால் மகிழ்ச்சி… வராவிட்டால் கவலையில்லை என்று சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

rajendra balaji talk tuff

இதனிடையே சிவகாசியில் பேசிய அமைச்சர் ராஜேந்தி பாலாஜி,  காலை பிடிக்கலாம், கையை பிடிக்கலாம், ஆனால் தோளில் ஏறி காதை கடிக்க வந்தால் கழுத்தறுப்போம் என்று தேமுதிகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கூட்டணி பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே சின்னப் பையனைவிட்டு பேசவைக்க வேண்டாம் என்றும் எங்களுக்கும் பேசத் தெரியும் என்றும் கடுமையாக பேசினார்.

rajendra balaji talk tuff

வரும் 5 ம் தேதிக்குப் பிறகு வேடிக்கையை வச்சுக்கிறோம் என்றும், எது வருது, எது போகுது என பார்ப்போம் என்றும் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உங்களுக்கு வாக்கு வங்கி கிடையாது என்றும் அதிமுகவை தேமுதிக சீண்டிப் பார்க்க வேண்டாம் என்றும் கிழித்து தொங்கவிட்டடார்.

Follow Us:
Download App:
  • android
  • ios