ஒரு ராஜேந்திரபாலாஜியை கண்டிக்காவிட்டால் பல ராஜேந்திரபாலாஜிக்கள் உருவாகி விடுவார்கள். இப்படி பேசுவது சவடால் அடிப்பது வீரமாகப் போய்விடும் என திமுக நாளிதழான முரசொலி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒரு ராஜேந்திரபாலாஜியை கண்டிக்காவிட்டால் பல ராஜேந்திரபாலாஜிக்கள் உருவாகி விடுவார்கள். இப்படி பேசுவது சவடால் அடிப்பது வீரமாகப் போய்விடும் என திமுக நாளிதழான முரசொலி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள கட்டுரையில், ‘’சில நாட்களுக்கு முன், நாளிதழ்களில் ஒரு செய்தி வெளியானது. அமைச்சர்கள் சிலரை அழைத்து முதலமைச்சர் பேசியதாகவும், அப்போது அமைச்சர்களுக்கு முதல் அமைச்சர் அறிவுரை கூறியதாக செய்தி கூறியது. தேவையற்ற விஷயங்களில் கருத்து சொல்ல வேண்டாம் என்று முதலமைச்சர் சொன்னதாகவும் கூறியது. அது உண்மையானால் ராஜேந்திர பாலாஜி ஏன் இப்படிப் பேசினார்? முதலமைச்சருக்கு அடங்காமல் இப்படி பேசுகிறாரா? அல்லது இவரை யாராவது இப்படி பேச வேண்டும் என்று மிரட்டி பேச வைக்கிறார்களா? யாருடைய உளறல் இந்த ராஜேந்திரபாலாஜி?
அமைதியாய் வாழும் மக்கள் மனதில் பீதியையும் அச்சத்தையும் விதைத்து வன்முறையே சரியான வழி என்று ராஜேந்திரபாலாஜி கருதினால், அதற்கான கும்பலைத் தொடங்கலாம். ஆனால் அதனை சைரன் காரில் போய்க்கொண்டு செய்ய முடியாது. சமூக அமைதியைக் கெடுப்பது குந்தகம் விளைவிப்பது இரு சமூகத்தினரிடையே மோதல் வளர்ப்பது, வன்முறையைத் தூண்டுவது, வன்முறை ஏற்படும் வகையில் பேசுவது வன்முறையை நியாயப்படுத்துவது- இப்படி எல்லா செக்ஷனிலும் வழக்குப் பதிவு செய்தால் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டிய வரும் அவர்.
தமிழக அமைச்சர்களின் மற்ற உளறல்களையும், இந்த பயங்கரவாத குரல்களையும் ஒன்றாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால், இந்த பயங்கறவாத உளறல்கள் ஜோக் ஆக கடந்து போகலாம். ஆனால் இந்த பயங்கரவாத பெரும் ஆபத்தில் முடியும். மூட்டி விட்டுவிட்டு ராஜேந்திரபாலாஜி போய் விடுவார். ஆனால் அனுபவிப்பவர்கள் மக்களும், நாடும்தான்.
ஒரு சொல் வெல்லும். ஒரு சொல் கொல்லும் என்பார்கள். எல்லா ஆயுதங்களையும் விட நாக்கு தான் வன்மையானது. தீயினால் சுட்ட புண் ஆறிவிடும் நாவினால் சுட்ட புண் ஆறாது என்றவரும் வள்ளுவரே. யாகாவாராயினும் நாகாக்க என்றவரும் அவரே. எடப்பாடியின் அமைச்சரவை நா காக்க வேண்டும்.
நாகாக்கத் தவறிய அமைச்சர்கள் மீது ஆளுநர்தான் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இதைவிட பயங்கரமாக வட இந்தியாவில் பேசுவார்கள் என்று ஆளுநர் அமைதியாக வேடிக்கை பார்த்து விடக் கூடாது. ஏனென்றால் ஒரு ராஜேந்திரபாலாஜியை கண்டிக்காவிட்டால் பல ராஜேந்திரபாலாஜிக்கள் உருவாகி விடுவார்கள். இப்படி பேசுவது சவடால் அடிப்பது வீரமாகப் போய்விடும். இந்த வாய் சொல் வீரர்களை ஆளுநர் அடக்கி ஆள வேண்டும்.
எடப்பாடியிடம் எதிர்பார்க்க முடியாது. அவரால் அமைச்சர்களை மட்டுமல்ல எம்.எல்.ஏ.,க்களையே கட்டுப்படுத்த முடியவில்லை. தனது நாற்காலி ஆடாமல் இருந்தால் போதும் யாரும் எப்படியும் போகட்டும் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போனால் நமக்கென்ன என்று இருப்பவர் அவர். ராஜேந்திர பாலாஜி மீது எடப்பாடி நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்க முடியாது. அவரை இவர்களை பார்த்து பயந்து கொண்டிருப்பவர் அதிமுகவில் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகிவிட்டனர். அதனால் தான் கோட்டையே சமூக விரோதிகளின் கூடாரம் ஆகிவிட்டது’’எனத் தெரிவித்துள்ளது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Feb 4, 2020, 12:46 PM IST