தப்பு செய்தது உறுதியாகி விட்டால் நெற்றியில் வைத்து சுட்டு பின்னாடி மூளையை சிதைத்து விட்டு போய்விட வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசமாக கூறியுள்ளார்.

 

தெலங்கானவில் மருத்துவர் ப்ரியங்கா ரெட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் 4 பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த விவகாரம் குறித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘’இவனுங்களை எல்லாம் என்ன சட்டத்துக்கு முன் முன் நிப்பாட்டி எவ்வளவு நாள் கழித்து தீர்ப்பு வழங்குவது?  ஓடிப்போனான்... சுட்டான் என்கவுண்டர் அப்போ...  தப்பித்து ஓடிப்போறவன பார்த்துகிட்டா இருக்க முடியும்..? சுட்டுட வேண்டியது தானே. அவனை தேடிப்பிடிச்சு, விசாரணை பண்ணி, ஜாமின்ல எடுத்து அவனுக்கு சோறு போட்டு, பாதுகாத்து, கோர்ட்டுக்கு போகச்சொல்லி இதெல்லாம் தேவையா? 

தப்பு செய்தது உறுதியாயிடுச்சுல்ல. நெத்தியில வைச்சு சுட்டு பின்னாடி மூளைய சிதைச்சிட்டு போயிடணும். என்ன அவனுங்களை வைச்சு வேடிக்கை பார்க்க? அப்பாவி பிள்ளையை கதறக் கதற கற்பழிச்சிருக்காய்ங்க. அவங்கள என்கவுண்டர் பண்ணாம கைகட்டி நிற்கணுமா? ’’என அவர் கேட்டுள்ளார்.