Asianet News TamilAsianet News Tamil

துப்பாக்கியுடன் தலைமறைவான ராஜேந்திர பாலாஜி... பதற்றத்தில் உறவினர்கள்..!

மகா என்று செல்லப் பெயரில் அழைக்கப்படும் அந்த லட்சுமிகரமான பெண்ணுக்கு ஆண் வாரிசு ஒன்றும் இவர் மூலம் கிடைத்துள்ளதாம். 

Rajendra Balaji disappears with a gun ... Relatives in tension
Author
Tamil Nadu, First Published Dec 23, 2021, 1:02 PM IST

ஆவினில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்துள்ளார் என தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்ததால் தலைமறைவாக இருந்தபடியே உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு இருக்கிறார் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி.

 8 தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அவருடன் தொடர்பில் இருப்பவர்களின் கைபேசி எண்கள், காவல்துறையால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ராஜேந்திர பாலாஜி தன்னுடைய மொபைல் போனை ஆப் செய்வதற்கு முன் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடமும் பேசிய விவரம் தெரிய வரவே புதுக்கோட்டை பக்கமும் போலீஸ் பார்வை திரும்பியிருக்கிறது. போலீஸின் ஒவ்வொரு அசைவும் ராஜேந்திர பாலாஜிக்கு அப்டேட் ஆக, பத்து நாட்களுக்கு முந்தைய அவருடைய அழைப்புகளை ஆராய்ந்ததில் கோகுல இந்திராவின் உறவுக்கார இன்ஸ்பெக்டர் ஒருவரின் நம்பரும் இருந்துள்ளது.Rajendra Balaji disappears with a gun ... Relatives in tension

காவல்துறையிடமும் இப்போது விசாரணை தீவிரமாகியுள்ளது. கேரளா, பெங்களூர் பக்கம் தீவிர தேடுதல் நடந்தாலும், மதுரையில் முன்னாள் அமைச்சரான செல்லூர் ராஜுவின் விராட்டிபத்து தோப்பு, மானாமதுரை உறவினர் வீடு, விருதுநகரின் ஒதுக்குப் புறம் என மேலும் சில இடங்களையும் போலீஸார் தேடி வருகின்றனர். தலைமறைவாகி ஒளிந்துள்ள ராஜேந்திரபாலாஜியிடம் ஒரு துப்பாக்கி இருக்கும் விவரம் போலீசுக்கு கிடைத்துள்ளது. 

ஆவின் வேலை மோசடிதான் அவரை அலைக்கழிக்கிறது. கட்சியினர் போஸ்டிங் மற்றும் பண விவகாரத்தை முதல் உதவியாளரும்,  வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களை உதவியாளர் பலராமனும் கவனித்து வந்ததாக கூறுகின்றனர். வெம்பக்கோட்டை அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்த விஜய நல்ல தம்பியிடம் ஆவின் வேலை விஷயமாக பலராமன் பேசியது ரெக்கார்ட் செய்யப்பட்டது தற்போது ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக ஆவணமாக்கப்பட்டுளது. Rajendra Balaji disappears with a gun ... Relatives in tension

ஒன்றிய செயலாளர் என்ற முறையில் விஜய நல்லதம்பி முன்வைத்த ஆவின் வேலை சம்பந்தமான கோரிக்கைகளை பரிசீலித்து பலராமன் நிறைவேற்றி தந்ததெல்லாம் நடந்திருக்கிறதாம். சபா காளிமுத்துவின் தம்பி அதாவது விஜய நல்ல தம்பி. இவரது உடன் பிறந்த அண்ணன் ரவிச்சந்திரனுக்கு, அமைச்சராக இருந்தபோது ராஜேந்திரபாலாஜி ஒரு சகாயம் செய்துள்ளார். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் ரவிச்சந்திரனின் மனைவிக்கு துணைவேந்தர் பதவி கிடைப்பதற்கு உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பழனியப்பன் மூலம் எதிர்பார்ப்பின்றி உதவினாராம் ஜாஜேந்திர பாலாஜி. 

விஜய நல்லதம்பி வசூலித்து கொடுத்த பணத்துக்கான ஆவின் போஸ்டிங் சம்பந்தப்பட்ட ஒரு சிலருக்கு கிடைத்திருபதாக சொல்கிறார்கள். மோசடி புகாரில் ராஜேந்திர பாலாஜி தலைமறைவானது விருதுநகர் மாவட்ட அதிமுகவை மேலும் பலவீனப்படுத்தி இருக்கிறது என்கிறார்கள் மாவட்ட அதிமுகவினர்.

Rajendra Balaji disappears with a gun ... Relatives in tension

அதெல்லாம் சரி.. வேலை வாங்கித் தருவதாக சொல்லி வாங்கினாராமே அந்த ரூ.3 கோடி பணம் எங்கே? என்ற கேள்விக்கு மற்றொரு அதிர்ச்சித் தகவலையும் கிசுகிசுக்கின்றனர். விஜய் நல்லதம்பியை, டைவர்ஸ் வழக்கிற்காக தனது பெண் குழந்தையுடன் அழகு நிலையம் நடத்தி வந்த ஒரு பெண் சந்தித்துள்ளார். அந்தப் பெண்ணை தன்னுடன் சேர்த்துக்கொண்டு இரண்டாவதாக புது வாழ்க்கை அமைத்துக் கொண்டார் விஜய் நல்லதம்பி. மகா என்று செல்லப் பெயரில் அழைக்கப்படும் அந்த லட்சுமிகரமான பெண்ணுக்கு ஆண் வாரிசு ஒன்றும் இவர் மூலம் கிடைத்துள்ளது. அந்த இரண்டாவது குடும்பத்துக்கு சிவகாசி அருகே, கருமன் கோவில் அருகில் உள்ள பிருந்தாவனம் தெருவில் வெளியில் சாதாரணமானதாகவுல் உள்ளே பிரம்மாண்டமான உள் வேலைப்பாடுகளுடன் கூடிய பங்களாவை கோடிக்கணக்கில் செலவழித்து கட்டிக் கொடுத்திருக்கிறார் நல்லதம்பி.

மகா மற்றும் அவரது மகன் பெயரில் ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கிப் போட்டிருக்கிறார் விஜய் நல்லதம்பி. வேலை வாங்கி தருகிறேன் என்று பணம் மோசடி செய்ததாகவும் வேறு சிலர் நிதி நெருக்கடியும் கொடுக்க, அப்போது, ‘’ நிலத்தை விற்று செட்டில் செய்து விடுகிறேன்’’ என்று உறுதியளித்திருந்தார் விஜய் நல்லதம்பி. ஆனால் நிலத்திற்குரிய பெண்ணான மகாவோ, எனக்கும், நல்லதம்பிக்கும் சம்பந்தம் இல்லை என போலீஸ் முன்னிலையிலேயே எழுதி கொடுத்து விட்டாராம். 

இந்த நிலையில்தான் ரவீந்திரன் என்பவர் தன்னுடைய சகோதரி மகனுக்கு ஆவினில் மேனேஜர் வேலை வாங்கித் தருவதாக சொல்லி 30 லட்சம் மோசடி செய்துவிட்டதாக புகார் அளித்து விட்டார். காவல்துறையிடம் உறுதியளித்தபடி ரவீந்தருக்கு பணத்தை திருப்பித் தராத நிலையில் தான் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் மீது ரூ 3 கோடி ரூபாய் புகார் கிளம்பியுள்ளது. ராஜேந்திர பாலாஜி மீது பல புகார்கள் வந்துள்ளன. நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறிவரும் நிலையில் மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருக்கிறார் ராஜேந்திரபாலாஜி.Rajendra Balaji disappears with a gun ... Relatives in tension

போலீஸ் எப்படி கச்சிதமாக காய் நகர்த்தும் என்பதை அறிந்தவரான ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் முன் முன்ஜாமின் செய்துவிட்டு  தலைமறைவாக உள்ளார். இந்த நிலையி தான் ராஜேந்திர பாலாஜி மீதான கிரிமினல் வழக்கில் தமிழக காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios