அம்மா என்ற ஆளுமை இல்லாத இடத்தில் மோடிதான் எங்கள் டாடி. இந்தியாவின் டாடி என சொன்ன பிஜேபியின் தீவிர விசுவாசியை ஓரங்கட்டிவிட்டு மோடியின் முரட்டு பக்தனாக இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி, மோடி நெனச்சால் திமுக பஸ்பம் ஆகிவிடும். நாங்க நெனச்சா திமுக என்ற ஒரு கட்சியே இருக்காது என செம தில்லா சவால் விட்டுள்ளார். 

தினகரன் கட்சியிலிருந்து திமுகவுக்கு தங்க தமிழ்செல்வன் தலைமையில் அமமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் விழா தேனி அருகே வீரபாண்டியில் நடைபெற்றது. 

இந்த விழாவில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், இங்கு வந்து சேர்ந்து இருக்கக்கூடிய தங்க தமிழ்ச்செல்வனை மட்டுமல்ல, உங்களை மட்டுமல்ல உண்மையாக அதிமுகவிற்காக இன்றைக்கும் உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய அந்த உண்மை விசுவாசிகள் தொண்டர்கள் அதிமுகவில் இருப்பது நியாயமல்ல, நீங்க இருக்கவேண்டிய இடம், உங்களுடைய இயக்கம் தாய்க்கழகம் திராவிட இயக்கமாக இருக்கக்கூடிய திமுக தான். அவங்களையும் நான் வருக, வருக, வருக என வரவேற்கிறேன்.  

இதற்கு சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அம்மா விசுவாசியும், தற்போதைய மோடியின் முரட்டு பக்த்தனான அமைச்சர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நாங்க சொல்லுகிறோம். உண்மையான அண்ணா தலைமையில் உள்ள திமுக தொண்டர்கள் அத்தனை பேரும் அதிமுகவில் வந்து இணைய வேண்டும் என்று எங்க அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்கு விருப்பம் உள்ளது. 

எனவே அண்ணா தலைமையில் இருந்த திமுகவில் பணியாற்றிய, அண்ணா தலைமையை ஏற்றுக்கொண்ட திமுக தலைவர்கள், தொண்டர்கள் எல்லோரும் மொத்தமா அதிமுகவுக்கு வரணும். அதிமுக தொண்டர்கள் ஒருத்தவங்க கூட அங்கே போகமாட்டாங்க. ஆண்டிபட்டி தங்க தமிழ்செல்வன், கரூர் செந்தில் பாலாஜி போனா எல்லோரும் போய் விட மாட்டார்ங்க...  என்னமோ சொன்னாரு டெல்லிக்கு 37 எம்.பி.க்கள் போகிறோம்... பார்லிமெண்டையே முடக்கிவிடுவோம்ன்னு. மோடியை தடுத்துவிடுவோம்ன்னு. இந்த ஆட்சியை உண்டு இல்லை என ஆக்கிடுவோம்ன்னு சொன்னாரு.

மோடி நெனச்சா திமுக பஸ்பம் ஆகிடும். நாங்க நெனச்சா திமுக என்கிற கட்சியே இருக்காது. அந்த அளவுக்கு வலு இருக்கிறது. இந்த நாட்டினுடைய பிரதமரை முன் மொழியக் கூடிய இடத்தில் அண்ணன் பழனிசாமி இருக்கிறார்.  ஜனாதிபதியிடம் பிரதமர் வேட்பாளர் யார் என்று பட்டியல் கொடுத்ததில் ஒருவராக சென்றவர் அண்ணன் பழனிசாமி என பேசினார்.