புற்று நோயால் பாதிக்கப்பட்டு பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் அன்நதகுமார் திடீரென மரணமடைந்தார். அவரது உடலுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜ தலைவர்களும், எதிர்கட்சித் தலைவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அனந்தகுமாரின் உடலுக்கு அவரது நெருங்கிய நண்பரும், பாஜக எம்.பி.யுமான ராஜீவ் சந்திரசேகர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த அமைச்சர் அனந்தகுமார் மாணவபருவத்தில்ஏ.பி.வி.பி. அமைப்பில்சேர்ந்தார். தனதுபள்ளிகல்வியைஉப்பள்ளியில்முடித்தார். பின்னர்சட்டப்படிப்புபயின்றார். அதன்பிறகுபெங்களூருவில்வந்துகுடியேறி, தீவிரஅரசியலில்ஈடுபட்டார்.
இவர்தனதுகல்லூரிபருவத்தில்பாஜகவின் அகிலபாரதியவித்யார்த்திபரிஷத்தில்உறுப்பினராகபணியாற்றிபல்வேறுபொறுப்புகளைவகித்தார். நாட்டில்அமல்படுத்தப்பட்டநெருக்கடிநிலையைஎதிர்த்துபோராடினார். இதற்காகஅவர்சுமார் 30 நாட்கள்சிறையில்அடைக்கப்பட்டார்.
1987-ம்ஆண்டுஅவர்பாஜகவில் சேர்ந்தார். கட்சியில்அவர்மாநிலசெயலாளர், இளைஞர்அணிதலைவர், மாநிலபொதுச்செயலாளர், தேசியபொதுச்செயலாளராகபணியாற்றினார். கர்நாடகத்தில்பாஜகவின் வளர்ச்சியில்எடியூரப்பாவுக்குஅடுத்தபடியாகஅனந்தகுமார்முக்கியபங்குவகித்தார்.
1996-ம்ஆண்டுபெங்களூருதெற்குநாடாளுமன்றதொகுதியில்அனந்தகுமார்முதல்முறையாகபோட்டியிட்டுவெற்றிபெற்றுஎம்.பி.யாகதேர்ந்தெடுக்கப்பட்டார். அந்ததொகுதியில்அவர்தொடர்ச்சியாக 6 முறைபோட்டியிட்டுஎம்.பி.யாகதேர்வாகியுள்ளார். 1998-ம்ஆண்டுவாஜ்பாய்அமைச்சரவையில் , அமைச்சராக இடம்பெற்றார். அவர்மிகஇளம்வயதுஅமைச்சர் என்றபெயரைபெற்றார்.
தற்போது விமானம், சுற்றுலா, விளையாட்டு, நகரவளர்ச்சிமற்றும்வறுமைஒழிப்புத்துறைஅமைச்சராக பணியாற்றினார். இதேபோல் நாடாளுமன்றநிலைக்குழுக்களிலும்பதவிவகித்தார். இந்நிலையில்தான் அனந்தகுமார் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட இடங்களில் இதற்காக சிகிச்சை பெற்று வந் இவர் சில நாட்களுக்கு முன்பு பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் தான் நேற்று அதிகாலை அனந்தகுமார் மரணமடைந்தார். அவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே பாஜக மாநிலங்களவை உறுப்பினரும், அமைச்சர் அனந்த குமாரின் நெருங்கிய நண்பருமான ராஜீவ் சந்திரசேகர் அவரின் உடலுக்கு மாலை அணிவித்து கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார்.
ராஜீவ் சந்திரசேகர் எம்.பி.யைப் பொறுத்தவரை மறைந்த அமைச்சர் அனந்தகுமார் கடந்த 24 ஆண்டுகளாக நெருங்கிப் பழகியவர். ராஜீவை அரசிலுக்கு கொண்டு வந்தவரே அனந்தகுமார்தான் என கூறப்படுகிறது. அரசியலில் தனக்கு வழிகாட்டியாகவும், குருவாகவும் அவரை மதித்து நடந்து வந்தவர் ராஜீவ் சந்திர சேகர்.

அவரது மறைவுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருந்த ராஜீவ் சந்திரசேகர் ,இன்று எனக்கு ஒரு சோகமான நாள்…எனது நண்பர், எனது சகோதரர், எனது வழிகாட்டி அனந்தகுமார் மறைந்துவிட்டார் என குறிப்பிட்டிருந்தார், மேலும் அனந்தகுமார் எனது குடும்பத்தில் ஒருவர்..எனது அரசியல் நண்பர்களிலேயே உண்மையானவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மனதாபிமானம் மிக்க மனிதர் என்றும்… இவ்வளவு விரைவில் நீ மறைந்து போவாய் என்று நான் நினைக்கவில்லை என்றும், போய் வா என் நண்பனே என ராஜீவ் சந்திரசேகர் உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று மறைந்த அமைச்சர் அனந்தகுமாரின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அவர்து உடல் வீட்டிலிருந்து பெங்களூருவில் உள்ள பாஜக அலுவலகத்தில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அப்போது ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. அவரது உடலுக்கு கண்ணீர் மல்க மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடந்து மறைந்த அமைச்சரின் உடலுக்கு இறுதிக் சடங்குகள் நடைபெற்றன.
