Asianet News TamilAsianet News Tamil

ராஜஸ்தான் : காங்கிரஸ் எம்எல்ஏக்களை விட பாஜக எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம்.! காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திர ஹீீடா .!

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி பா.ஜனதா ஆட்சியை கவிழ்க்க சதி செய்து வருகிறது என்று அசோக் கேலாட் குற்றம்சாட்டினார்.
 

Rajasthan BJP MLAs are more on our side than Congress MLAs Congress MLA Rajendra Heeda.!
Author
Rajasthan, First Published Jul 13, 2020, 12:57 AM IST

அசோக் கோலட்டிடம் பெரும்பான்மை உள்ளது. நாங்களும் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். பாஜகவை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் எங்கள் தொடர்பில் உள்ளனர். நாங்கள் இழக்கும் எம்.எல்.ஏ.க்களை விட பாஜகவில் இருந்து அதிக எம்.எல்.ஏ.க்களை எங்கள் பக்கம் கொண்டு வருவோம்’ என அதிரடியாக குண்டை வீசியிருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

Rajasthan BJP MLAs are more on our side than Congress MLAs Congress MLA Rajendra Heeda.!
ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கேலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும் மிகப்பெரிய அளவில் எம்எல்ஏக்கள் வித்தியாசம் கிடையாது. இதனால் அசோக் கேலாட்கின் ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும் என்ற நிலையே ராஜஸ்தானில் நிலவி வந்தது.கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி பா.ஜனதா ஆட்சியை கவிழ்க்க சதி செய்து வருகிறது என்று அசோக் கேலாட் குற்றம்சாட்டினார்.


 முதல்வர் கெலட்க்கு  சச்சின் பைலட் ஆதரவாக இருந்தார். அதனால் அந்த நேரத்தில் ஆட்சிக்கு குழப்பம் ஏதும் ஏற்படவில்லை. கடந்த சில நாட்களாக ராஜஸ்தான் துணை முதல்வர், மாநில காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட்டுக்கும், முதலமைச்சர் அசோக் கேலாட்டுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வந்தது.ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாக வெளியான தகவலை விசாரிக்க முதலமைச்சர் அசோக் கேலாட் சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்தார்.அந்த விசாரணைக்குழுவின் முன் ஆஜராக துணை முதல்வர் சச்சின் பைலட் உள்ளிட்ட அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் வெள்ளிக்கிழமை கடிதம் அனுப்பப்பட்டது.இதனால் ஆத்திரமடைந்த சச்சின் பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலருடன் இன்று திடீரென டெல்லி சென்றார்.

Rajasthan BJP MLAs are more on our side than Congress MLAs Congress MLA Rajendra Heeda.!

தற்போது சச்சின் பைலட்டிடம்19-க்கும் அதிகமான எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர். இவர் பா.ஜனதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஒருவேளை இது உண்மை என்றால் மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா பிரிந்து சென்று காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்தது போல் சச்சின் பைலட்டும் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. 

தற்போது நிலவி வரும் அரசியல் குழப்பம் குறித்து, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் அவினேஷ் பாண்டே பேசுகையில்..." டெல்லிக்கு சென்ற அனைத்து எம்.எல்.ஏ.க்களுடனும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்திவிட்டோம். பேச்சுவார்த்தைக்கு பின் பெரும்பாலானோர் ராஜஸ்தானுக்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர்.ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் அரசை நிலைகுலையச்செய்ய பாஜக முயற்சி செய்து வருகிறது. ஆனால் அந்த முயற்சியில் அவர்கள் வெற்றிபெற மாட்டார்கள். காங்கிரஸ் வலிமையாக இணைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கட்சி மீது முதலமைச்சர் அசோக் கோலட் மீதும் நம்பிக்கை வைத்துள்ளனர். தற்போது உள்ள நிலைமையை பாஜாக வேண்டுமேன்றே திசைதிருப்புகிறது" என்றார்.

 Rajasthan BJP MLAs are more on our side than Congress MLAs Congress MLA Rajendra Heeda.!
இதற்கிடையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கோலட் நேற்று இரவு 10 மணியளவில் திடீர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை முதலமைச்சரின் வீட்டில் வைத்து நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்நிலையில், முதலமைச்சருடன் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றப்பின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேந்திர ஹூடா கூறுகையில், 

'அசோக் கோலட்டிடம் பெரும்பான்மை உள்ளது. நாங்களும் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். பாஜகவை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் எங்கள் தொடர்பில் உள்ளனர். நாங்கள் இழக்கும் எம்.எல்.ஏ.க்களை விட பாஜகவில் இருந்து அதிக எம்.எல்.ஏ.க்களை எங்கள் பக்கம் கொண்டு வருவோம்’ என அதிரடியாக குண்டை வீசியிருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios